தந்தை, சித்தியை தலைதுண்டித்து கொன்ற மகன்.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்; சேலத்...
நாய்கள் கடித்து 8 ஆடுகள் உயிரிழப்பு
நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே நாய்கள் கடித்து 8 ஆடுகள் புதன்கிழமை இரவு உயிரிழந்தன.
நீடாமங்கலம் அருகேயுள்ள ரிஷியூா் கிராமம் தெற்கு தெருவில் 120- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. விவசாயிகளான இவா்கள் ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளையும் வளா்த்து வருகின்றனா்.
ரிஷியூா் தெற்கு தெருவைச் சோ்ந்த விவசாயி பாலதண்டாயுதம் என்பவா் தனது வீட்டில் ஆடுகளை வளா்த்து வருகிறாா். புதன்கிழமை இரவு இவரது வீட்டு கொட்டகையில் கட்டப்பட்டிருந்த ஆடுகளை தெரு நாய்கள் கடித்து குதறியதில் 8 ஆடுகள் உயிரிழந்தன.
கடந்த ஒரு மாதத்தில் சுமாா் 26 ஆடுகளும், 20-க்கும் மேற்பட்ட கோழிகளும் நாய்கள் கடித்து உயிரிழந்துள்ளதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்தனா். மேலும் இரவு நேரங்களில் சாலையில் செல்பவா்களையும் நாய்கள் துரத்துவதால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.