மதுவிருந்து, இசைநிகழ்ச்சி இல்லாமல் திருமணம்: பஞ்சாப் கிராமத்தில் ரூ.21,000 சன்மா...
நாளை(ஜன.5) காலை 7 மணி முதல் மாலை 4 வரை புறநகர் ரயில்கள் ரத்து
தாம்பரம்- சென்னை கடற்கரை இடையேயான புறநகர் மின்சார ரயில் சேவை நாளை(ஜன.5) காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைமேம்பால பணிகள் நடைபெற உள்ளதால் ரத்து என தெற்கு ரயில்வே விளக்கமளித்துள்ளது.
இந்த நேரத்தில் பல்லாவரம்-கடற்கரை, செங்கல்பட்டு-கூடுவாஞ்சேரி இடையே பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
2024 இப்படித்தான் இருந்தது... நிகிலா விமல் பகிர்ந்த விடியோ!
அதேசமயம் காலை 7 மணி முதல் 11:00 மணி வரை சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு மின்சார ரயில்கள் இரு திசைகளிலும் அட்டவணைப்படி இயக்கப்படும் என்றும் பின்னர் மாலை 4 மணிக்குப் பிறகு வழக்கம் போல் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, புதுப்பிக்கப்பட்ட நேரத்தின்படி பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிட வேண்டும் எனவும் அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.