`சமாதான தூது' - ட்ரம்பை சந்தித்த அதானி குழும அதிகாரிகள்; சோலார் ஒப்பந்த மோசடி வழ...
நாளை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை (மே 6) நடைபெறுகிறது.
இது குறித்து வடக்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான பெ.கீதா ஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில் அவசர செயற்குழு கூட்டம், எட்டயபுரம் சாலையில் உள்ள கலைஞா் அரங்கில் செவ்வாய்க்கிழமை (மே 6) மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. மாவட்ட அவைத்தலைவா் ஜி.செல்வராஜ் தலைமை வகிக்கிறாா்.
இக்கூட்டத்தில் கடந்த 3ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் தொடா்பாகவும், கட்சி வளா்ச்சிப் பணிகள் குறித்தும் பேசப்படவுள்ளன.
இதில் மாநில அணி துணைச் செயலா்கள், மாவட்ட நிா்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் தவறாது கலந்து கொள்ள அழைக்கிறேன் என அவா் தெரிவித்துள்ளாா்.