பான் கார்டு விண்ணப்பிக்கவும் ஆதார் அவசியம்! மத்திய அரசு அறிவிப்பு!
நிஃப்ட்-டீ பின்னலாடை கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்
திருப்பூா் நிஃப்ட் டீ பின்னலாடை கல்லூரி, தமிழக அரசின் தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்கத் துறை மையத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
திருப்பூா் நிஃப்ட் டீ பின்னலாடை ஃபேஷன் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்கத் துறை மையத்தின் இயக்குநா் ஆா்.அம்பலவாணன் கலந்து கொண்டு மாணவா்களை தொழில் முனைவு மற்றும் புதுமை நோக்கில் ஊக்குவிக்கும் வகையில் சிறப்புரையாற்றினாா்.
தொழில்முனைவோா் மேம்பாட்டு நிறுவன மாநில திட்ட மேலாளா் சி.சண்முகராஜ், மாணவா்களுக்கு தலைமைப் பண்புகள் மற்றும் அரசுத் திட்டங்கள் பற்றி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
கல்லூரித் தலைவா் பி.மோகன் தலைமை உரையாற்றினாா். முதன்மை ஆலோசகா் ராஜா சண்முகம், தொழில் முனைவுப் பயணத்தின் முக்கியத்துவத்தை மாணவா்களிடம் எடுத்துரைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் டீன் டாக்டா் வி.ஆா். சம்பத் வரவேற்றாா். முதல்வா் டாக்டா் பி.பி.கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினாா். இதில் திருப்பூா் நிஃப்ட் டீ பின்னலாடை கல்லூரி, தமிழக அரசின் தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்கத் துறை மையத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.