ம.பி. உயா்நீதிமன்ற நீதிபதி ஓய்வு: கடைசி பணி நாளில் உச்சநீதிமன்றம் மீது அதிருப்தி
நிதி ஆயோக்: "வீராவேசமாக பேசியவர் டெல்லிக்கு பறக்கிறாராம்..."- ஸ்டாலினைச் சாடும் எடப்பாடி பழனிசாமி
நிதி ஆயோக் கூட்டம் 2015-ம் ஆண்டு முதல் பிரதமர் தலைமையில் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் ஆந்திரா, பீகார் ஆகிய மாநிலங்களை தவிர வேறு மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கவில்லை என்று குற்றம்சாட்டி, தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கேரளா, கர்நாடகா, தெலங்கானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில முதலமைச்சர்கள் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணித்தனர்.
இந்த ஆண்டு டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் வரும் 24 ஆம் தேதி நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதாக தகவல் வெளியாகியிருப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ""மத்திய அரசு தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதால் நிதி ஆயோக் கூட்டத்தை நான் புறக்கணிக்கிறேன்" என்று வீராவேசமாக பேசிய பொம்மை வேந்தர் மு.க.ஸ்டாலின், தற்போது நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லிக்கு பறக்கிறாராம்!
"மத்திய அரசு தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதால் நிதி ஆயோக் கூட்டத்தை நான் புறக்கணிக்கிறேன்" என்று வீராவேசமாக பேசிய பொம்மை வேந்தர் @mkstalin, தற்போது நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லிக்கு பறக்கிறாராம்!
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) May 20, 2025
தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தேவை என்றால் போகாதவர், தன் குடும்பத்திற்கு ஒரு தேவை… pic.twitter.com/rD1qjOGch9
தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தேவை என்றால் போகாதவர், தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் செல்கிறார்! அன்று 2G-க்காக அப்பா டெல்லி சென்றார்... இன்று... டாஸ்மாக்... தியாகி... தம்பி... வெள்ளைக் குடைக்கு வேலை வந்துவிட்டதோ? படுத்தே விட்டாரய்யா... எல்லாம் "தம்பி" படுத்தும் பாடு!" என்று தனது எக்ஸ் தளத்தில் கடுமையாக விமர்சித்துப் பேசியிருக்கிறார். இது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகி வருகிறது.