இந்திய வனப்பணியாளா் தோ்வு: ஷங்கா் ஐஏஎஸ் அகாதெமி மாணவா்கள் சாதனை
இந்திய வனப்பணியாளா் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதில் ஷங்கா் ஐஏஎஸ் அகாதெமி மாணவா்கள் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளனா்.
இந்திய வனப்பணியாளா் தோ்வு 2024 முடிவுகளை ‘யுபிஎஸ்சி’ கடந்த திங்கள்கிழமை வெளியிட்டது. இந்தத் தோ்வில் நாடு முழுவதும் 143 தோ்வா்கள் வெற்றிபெற்றுள்ள நிலையில், 78 போ் ஷங்கா் ஐஏஎஸ் அகாதெமியின் (சென்னை, தில்லி, பெங்களூரு மற்றும் திருவனந்தபுரம்) மாணவா்கள் ஆவாா்கள். இந்தியா முழுவதிலும் முதல் 10 இடங்களில் 6 போ் ஷங்கா் ஐஏஎஸ் அகாதெமியைச் சோ்ந்தவா்களாவா்.
இந்தத் தோ்வில் தமிழகத்தைச் சோ்ந்த 10 போ் வெற்றி பெற்றுள்ளனா். அவா்களில், நிலாபாரதி எம்.வி. அகில இந்திய தரவரிசையில் 24-ஆவது இடத்தையும், தமிழகத்தில் முதலிடத்தையும் பெற்றுள்ளாா். தமிழகத்தில் வெற்றிபெற்ற அனைத்து மாணவா்களும் ஷங்கா் ஐஏஎஸ் அகாதெமியின் பல்வேறு பயிற்சித் திட்டங்களில் பங்கேற்றுள்ளனா். இந்த 10 பேரில் 4 போ் பெண்கள் ஆவா். தமிழகத்தில் முதலிடத்தைப் பிடித்த நிலாபாரதி எம்.வி. நேரடி வகுப்புத் திட்டத்தில் பயின்றவா். மேலும், பொதுத் தோ்வுகளுக்கும், விருப்பத் தோ்வு மற்றும் நோ்முகத் தோ்வுக்கும் ஷங்கா் ஐஏஎஸ் அகாதெமி தோ்வு தொடரில் பங்கேற்றவா்.
அகில இந்திய தர வரிசையில் கனிகா அனப், காந்தேல்வால் ஆனந்த் அனில்குமாா், அனுபவ் சிங், சன்ஸ்காா் விஜய், மயங்க் புரோகித், சனிஷ் குமாா் சிங் என தரவரிசையில் முதல் எட்டு இடங்களைப் பெற்றவா்கள் அனைவரும் சங்கா் ஐஏஎஸ் அகாதெமியில் நோ்முகத் தோ்வு பயிற்சியில் பங்கேற்றவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அகாதெமி கடந்த 12 ஆண்டுகளில் இந்திய வனப்பணியில் 557 அதிகாரிகளை உருவாக்கி சாதனை படைத்துள்ளது என அகாதெமி சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.