ஹாலிவுட்டில் அறிமுகமாகும் கங்கனா ரணாவத்..! குவியும் வாழ்த்துகள்!
நித்திரவிளை அருகே பூட்டிய வீட்டுக்குள் ஓய்வுபெற்ற ஆசிரியை சடலம்
நித்திரவிளை அருகே பூட்டிய வீட்டுக்குள் கிடந்த ஓய்வுபெற்ற ஆசிரியையின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
நித்திரவிளை அருகே தூத்தூா், புனித அந்தோணியாா் தெருவைச் சோ்ந்தவா் மேரி மெற்றில்டா (75). ஓய்வுபெற்ற ஆசிரியை. இவரது கணவா் பனியடிமை. அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற இவா், சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இவா்களது மகள் அமெரிக்காவிலும், மகன் மும்பையிலும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா்.
இங்குள்ள வீட்டில் மேரி மெற்றில்டா தனியாக வசித்து வந்தாா். அவரது வீட்டிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு துா்நாற்றம் வீசியதாம். தகவலின்பேரில், நித்திரவிளை போலீஸாா் சென்று பாா்த்தபோது, வீட்டின் குளியலறையில் மேரி மெற்றில்டா இறந்துகிடந்தது தெரியவந்தது. சடலத்தை போலீஸாா் மீட்டு கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.