செய்திகள் :

நியூசிலாந்தில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

post image

நியூசிலாந்து நாட்டின் நார்த் தீவு பகுதியில், 4.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக, அந்நாட்டின் புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

நியூசிலாந்தின் ஹாக்ஸ் பே பகுதியில், ஹாஸ்டிங்ஸ் நகரத்தில் இருந்து 20 கி.மீ. தூரத்தில் நிலப்பரப்பில் இருந்து 30 கி.மீ. ஆழத்தில், இன்று (ஆக.13) 4.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம், அந்நாட்டின் உள்ளூர் நேரப்படி மாலை 6 மணியளவில் ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அதன் அதிர்வுகளை சுமார் 6,000-க்கும் மேற்பட்டோர் உணர்ந்ததாக, ஜியொநெட் இணையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, இந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகள் குறித்து தற்போது வரையில் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், அப்பகுதியில் சுற்றியுள்ள கட்டமைப்புகள் அனைத்தும் அதிர்வினால் குலுங்கியதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, சுமார் 50 லட்சம் மக்கள் வாழும் நியூசிலாந்து நாடானது “ரிங்க்ஸ் ஆஃப் ஃபையர்” எனப்படும் மிகப் பெரியளவிலான டெக்டானிக் பிளவுக்கோட்டின் மீது அமைந்துள்ளதால், அங்கு எப்போது வேண்டுமானாலும் நிலநடுக்கம் ஏற்படும் அபாயமுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:பாகிஸ்தானில் 4 நாள்களில் 50 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

A 4.9 magnitude earthquake has struck New Zealand's North Island, the country's Geological Survey has reported.

பாகிஸ்தான் சுதந்திர நாள்: துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாடியதில் மூவர் பலி; 64 பேர் காயம்!

பாகிஸ்தானில் துப்பாக்கியால் சுட்டு சுதந்திர தினத்தை கொண்டாடியதில், 8 வயது சிறுமி உள்பட மூவர் பலியாகியுள்ளனர்.மேலும், குண்டு பாய்ந்ததில் காயமடைந்த 60 -க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அ... மேலும் பார்க்க

அமெரிக்காவில் சீக்கிய முதியவா் மீது இனவெறித் தாக்குதல்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் சீக்கிய முதியவா் ஹா்பால் சிங் (70) மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அவரது தலையில் எலும்புகள் உடைந்தன. இதையடுத்து அவா் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டாா்.... மேலும் பார்க்க

அமெரிக்காவில் ஹிந்து கோயில் அவமதிப்பு: இந்தியா கண்டனம்

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் பிரபல ஹிந்து கோயில் மா்ம நபா்களால் அவமதிக்கப்பட்ட சம்பவத்துக்கு இந்திய துணைத் தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இண்டியானா மாகாணத்தின் கிரீன்வுட் நகரில் சுவாமி நாராயண... மேலும் பார்க்க

இத்தாலி: அகதிகள் படகு கவிழ்ந்து 20 போ் உயிரிழப்பு

இத்தாலிக்குச் சொந்தமான லம்படூசா தீவு அருகே அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 போ் உயிரிழந்தனா். லிபியாவிலிருந்து லம்படூசாவை நோக்கி சுமாா் 92-லிருந்து 97 அகதிகளை சட்டவிரோதமாக ஏற்றிச் சென்... மேலும் பார்க்க

வங்கதேசம்: ஷேக் ஹசீனாவுக்கு எதிரான ஊழல் வழக்கு தொடக்கம்

வங்கதேசத்தில் மாணவா் போராட்டம் மூலம் கடந்த ஆண்டு பதவில் இருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மற்றும் 17 பேருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள ஊழல் வழக்கின் விசாரணை, டாக்காவில் உள்ள ஊழல் தடுப்பு ந... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: 4 நாள்களில் கொல்லப்பட்ட 50 பயங்கரவாதிகள்

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த 4 நாள்களில் ராணுவம் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையில் 50 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். அந்த மாகாணத்தின் ஸோப் மாவட்டம் சம்பாஸா பகுதியில் கடந்த 7-ஆம் தேதி முத... மேலும் பார்க்க