செய்திகள் :

நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் விலகல்!

post image

நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மைக் ஹெசன் கடந்த 2018 ஆம் ஆண்டுடன் ஓய்வு பெற்றார். அதன் பின், அனைத்து வடிவிலான போட்டிகளுக்குமான நியூசிலாந்து அணியின் பயிற்சியாளராக கேரி ஸ்டெட் செயல்பட்டு வருகிறார்.

இதையும் படிக்க: 27 வயதிலேயே கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார் புக்கோவ்ஸ்கி! பந்து தாக்கியதில் நிலைகுலைந்தவர்!

இந்த நிலையில், நியூசிலாந்து அணியின் வெள்ளைப் பந்து போட்டிகளுக்கான (டி20 மற்றும் ஒருநாள்) பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து அவர் விலகுவதாக அறிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

53 வயதாகும் கேரி ஸ்டெட் தலைமையிலான நியூசிலாந்து அணி பல்வேறு உயரங்களை எட்டியுள்ளது. ஐசிசி 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப்போட்டி, டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி மற்றும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி என இவரது தலைமையின் கீழ் நியூசிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டுள்ளது. இவரது தலைமையிலான நியூசிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல் எடிசனில் கோப்பையை வென்று அசத்தியது.

பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகியது குறித்து கேரி ஸ்டெட் பேசியதாவது: பயிற்சியாளராக ஒவ்வொரு நாட்டுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வாழ்க்கையில் இருந்து விலகி இருப்பதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். எனது எதிர்காலம் குறித்தும் யோசிக்க வேண்டியிருக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிரான தொடர்களில் அனுபவம் குறைந்த நியூசிலாந்து அணியை வைத்து சிறப்பாக செயல்படுவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டேன்.

இதையும் படிக்க: முத்தரப்பு தொடருக்கான இந்திய மகளிரணி அறிவிப்பு!

கடந்த 6-7 மாதங்கள் மிகவும் பிஸியாக இருந்தது. எனது எதிர்காலம் குறித்து முடிவு செய்ய வேண்டும். பயிற்சியாளராக என்னால் தொடர்ந்து செயல்பட முடியும் என நினைக்கிறேன். ஆனால், அனைத்து வடிவிலான போட்டிகளிலும் பயிற்சியாளராக செயல்பட விரும்பவில்லை என்றார்.

அண்மையில் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும் அனுபவம் வாய்ந்த வீரர்களின்றி விளையாடிய நியூசிலாந்து அணி கைப்பற்றி அசத்தியது குறிப்பிடத்தக்கது.

தைஜுல் இஸ்லாம் அபார பந்துவீச்சு; முதல் நாளில் ஜிம்பாப்வே 227 ரன்கள் குவிப்பு!

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஜிம்பாப்வே அணி 9 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் எடுத்துள்ளது.வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட... மேலும் பார்க்க

முத்தரப்பு கிரிக்கெட்: 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய மகளிரணி அபார வெற்றி!

இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய மகளிரணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா, இலங்கை, தென்னாப்பிரிக்க மகளிா் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடா் கொழும்பு பி... மேலும் பார்க்க

இவர்கள் மூவரும் இங்கிலாந்துக்கு சவாலளிப்பார்கள்; ரவி சாஸ்திரி கூறுவதென்ன?

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் இங்கிலாந்து அணிக்கு சவாலளிப்பார்கள் என இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடர் நிறைவடைந்த பிறகு இந்திய அணி இங்கில... மேலும் பார்க்க

இந்திய மகளிரணி சுழலில் வீழ்ந்த இலங்கை..! வெற்றிபெற 148 ரன்கள் இலக்கு!

ஐசிசி மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை 50 ஓவா்கள் போட்டி இந்தியாவில் நிகழாண்டு பிற்பகுதியில் நடைபெறவுள்ளது. அதற்கு அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன.இதையொட்டி இந்தியா, இலங்கை, தென்னாப்பிரிக்க மகளிா் அணிகள... மேலும் பார்க்க

சென்னையை வீழ்த்தியது ஹைதராபாத்

ஐபிஎல் போட்டியின் 43-ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸை வெள்ளிக்கிழமை வென்றது. சொந்த மண்ணில் சென்னைக்கு இது 4-ஆவது தோல்வியாகும். இந்த ஆட்டத்தில்... மேலும் பார்க்க

ஐசிசி தொடர்களில் இந்தியா - பாகிஸ்தானை ஒரே குழுவில் சேர்க்க வேண்டாம்! - பிசிசிஐ

ஐசிசி தொடர்களில் இந்தியா - பாகிஸ்தானை ஒரே குழுவில் சேர்க்க வேண்டாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஜம்மு - காஷ்ம... மேலும் பார்க்க