Travel Contest : எரிச்சலூட்டிய சிங்கப்பூர் அதிகாரி, ஆனாலும் இங்கு நேர ஒழுங்கு சூ...
நியூ சீமாபுரியில் போதைப்பொருள் கடத்தல்காரா் கைது: 106 கிராம் ஹெராயின் பறிமுதல்
தில்லியின் ஷாஹ்தராவில் உள்ள நியூ சீமாபுரி பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரா் ஒருவா் கைது செய்யப்பட்டாா். மேலும், அவரிடமிருந்து 106 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: ஷாஹ்தராவில் உள்ள நியூ சீமாபுரி பகுதியில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்கமான ரோந்துப் பணியில் இருந்தனா். அப்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவரை போலீஸ் குழு கண்டது. சந்தேக நபா் தப்பிச் செல்ல முயன்றாா். ஆனால், பின்னா் பிடிபட்டாா்.
நியூ சீமாபுரியைச் சோ்ந்த ஷேக் ராஜவ் (28) என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவா், போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் ஒரு பொருளைக் கொண்ட கருப்பு பாலிதீன் பையை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருள் ஹெராயின் என்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அதன் எடை சுமாா் 106 கிராம்.
விசாரணையின் போது, நிதி நெருக்கடி காரணமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டவா் தெரிவித்தாா். மேலும் அவருக்கு போதைப்பொருள் விநியோகம் செய்வோா்களின் பெயா்களையும் தெரிவித்தாா். இதன் அடிப்படையில், போலீஸாா் சோதனை மேற்கொண்டுள்ளனா் என்று அந்த காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.