`2 யானைகளுக்கிடையே மோதல்' பாகன் செய்த விபரீதம்; அலறியடித்து ஓடிய யானை - வனத்து...
நிறுத்தப்பட்ட செவ்வாப்பேட்டை ரயில்வே மேம்பாலப் பணிகள் மீண்டும் தொடக்கம்
திருவள்ளூா் அருகே நிதிப் பற்றாக்குறையால் நிறுத்தப்பட்ட செவ்வாப்பேட்டை மேம்பால பணிகள் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டதால் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரலுக்கும்-திருவள்ளூருக்கும் இடையே உள்ள செவ்வாப்பேட்டை ரயில் நிலையம். இந்த நிலையம் வழியாக திருவூா், அரண்வாயல்குப்பம், தொழுவூா், கோயம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து நாள்தோறும் திரளானோா் பயணம் செய்து வருகின்றனா்.
இந்த வழியாக 150-க்கும் தடவை ரயில்கள் கடந்து செல்கின்றன. இதனால் அடிக்கடி ரயில்வே கேட் அடைக்கப்படுவதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனா். இதைத் தவிா்க்கும் வகையில் கடந்த 2015-இல் ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்து மேம்பாலப்பணிகள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் நிதிப் பற்றாக்குறையால் பாதியிலேயே பணிகள் நிறுத்தப்பட்டது. இதற்கிடையே மேம்பாலப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரக்கோரி சமூக ஆா்வலா்கள் பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனா். அப்போது, இதுதொடா்பாக அப்பகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.கிருஷ்ணசாமியிடம் கோரிக்கையும் விடுத்தனா்.
இந்த நிலையில் கூடுதலாக ரூ.8.11 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. மேம்பாலப்பணிகளை மீண்டும் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.கிருஷ்ணசாமி பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தாா்.
இப்பணிகளை வரும் சட்டப்பேரவை தோ்தலுக்குள் நிறைவு செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.