செய்திகள் :

'நிறையப் பிரச்னைகள்... அம்மா அழுதுட்டாங்க; அப்பா இல்லாதது...'- விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன்

post image

அறிமுக இயக்குநர் அன்பு  இயக்கத்தில், மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘படைத்தலைவன்’. 

இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் சண்முக பாண்டியன் பேசிய விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

படைத்தலைவன் படத்தில் சண்முக பாண்டியன்
படைத்தலைவன் படத்தில் சண்முக பாண்டியன்

"இப்படத்தின் முதல்காட்சியில் அப்பாவைப் பார்க்கும்போதே நான் அழுதுவிட்டேன். அப்பா எங்களுடன் இல்லாதது கஷ்டமாகத் தான் இருக்கிறது.

ஆனால் அவர் மேல் இருந்து எங்களுக்கு ஆசிர்வாதத்தைத் தருகிறார் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம். அப்பாவுடைய பாடலை எல்லோரும் யூஸ் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்.

அதேபோல ‘நீ பொட்டு வெச்ச’ பாடலை ‘லப்பர் பந்து’ படம் வெளியாவதற்கு முன்பே இந்தப் படத்தில் நாங்கள் வைத்துவிட்டோம். நிறையப் பிரச்னைகளால் படம் தள்ளிப்போனதால் எங்களுடையது முதலில் வரவில்லை.

இந்தப் பாடலை பயன்படுத்துவதற்கு முன்பு அப்பாவிடம் கேட்டோம். அப்பா சரி என்று சொன்னப்பிறகு தான் அந்தப் பாடலை இந்தப் படத்தில் வைத்தோம். அம்மாவுக்கு படம் ரொம்ப பிடித்திருக்கிறது. எமோஷனல் ஆகிவிட்டார்கள்.

சண்முக பாண்டியன்
சண்முக பாண்டியன்

அம்மாவுக்கு நான் நடிக்க வேண்டும் என்பது ஆசை. ஆனால் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவருடன் இருக்கவேண்டிய நிலை இருந்தது. அதனால் என்னால் நடிக்க முடியவில்லை. ரொம்ப வருடங்கள் கழித்து என்னைத் திரையில் பார்த்ததால் அழுதுவிட்டார்கள்” என்று கூறியிருக்கிறார்.           

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Tourist Family: 'அவருடைய அந்த ஒரு புன்னகை என்னை...'- ரஜினியின் பாராட்டு குறித்து நெகிழும் இயக்குநர்

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், நடிகர் சசிகுமார், நடிகை சிம்ரன், மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், ஸ்ரீஜா ரவி எனப் பல... மேலும் பார்க்க

Dhanush: "எனக்காக எண்ணற்ற தியாகங்கள் செய்தவர்; என் அப்பாதான் என்னோட ஹீரோ" - நடிகர் தனுஷ்

அப்பாவின் அன்பு எப்போதும் பெரிதாகக் கொண்டாடப்படாத ஒன்று. அந்த அன்பெனும் தோளில்தான் நம் வாழ்க்கை அமர்ந்திருக்கும் என்பதை நாம் அப்பாவாகும்போதுதான் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். அப்பாக்கள் இருக்கும... மேலும் பார்க்க

'நான் முதல் படம் எடுப்பதற்கு அவர்தான் காரணம்' - நா.முத்துக்குமார் குறித்து நெகிழும் ராம்

மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரைக் கொண்டாடும் வகையில் ஜூலை 19ம் தேதி சென்னையில் நடக்கவுள்ள ‘ஆனந்த யாழை’ இசை நிகழ்ச்சி தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் ராம், நா.முத்துக்குமார் குறித்துப்... மேலும் பார்க்க

'என் படங்களை அங்கிருந்து எடுத்தேன், இங்கிருந்து எடுத்தேன்னு சொல்லுவாங்க, ஆனா..'- அட்லி ஓப்பன் டாக்

சென்னை சத்யபாமா கல்லூரியில் 14.06.2025 அன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.இந்த விழாவில் இயக்குநர் அட்லிக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அட்லி,"நான் எத்தனையோ ... மேலும் பார்க்க

Parthiban: 'ஆவலுடன் காத்திருக்கிறேன்!'- விரைவில் இயக்குநராகும் பார்த்திபனின் மகன்

தனது மகன் ராக்கி பார்த்திபன் விரைவில் கமர்ஷியல் திரில்லர் படம் ஒன்றை இயக்க இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன். இதுதொடர்பாகப் பார்த்திபன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதி... மேலும் பார்க்க