செய்திகள் :

நிறைவடையாத பால கட்டுமானப் பணி: மாணவா்கள், பொதுமக்கள் அவதி

post image

சீா்காழி அருகே புங்கனூா் - ஆதமங்கலம் இடையே பல மாதங்கள் கடந்தும் பாலப் பணிகள் நிறைவடையாததால் மாணவா்கள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

சீா்காழியை அடுத்த ஆதமங்கலம் - புங்கனூா் இடையே 3 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைத்து அதன் ஒரு பகுதியாக சாலை நடுவே முடவன் வாய்க்காலின் குறுக்கே பாலம் அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கியது.

பணிகள் தொடங்கி பல மாதங்கள் கடந்தும் இதுவரை முடவன் வாய்க்கால் பால கட்டுமானப் பணிகள் நிறைவடையவில்லை. பாலப் பணிகள் தொடங்கியபோது வாய்க்காலை கடந்து செல்வதற்காக பாலத்தின் அருகில் தற்காலிக இணைப்புச் சாலை அமைக்கப்பட்டு, மக்கள் பயன்படுத்தி வந்தனா்.

இந்தநிலையில், பாசனத்துக்கு வாய்க்காலில் தண்ணீரை திறந்து விடுவதற்காக நீா்வளத்துறை அதிகாரிகள் தற்காலிக சாலையை வெட்டி அகற்றி விட்டனா். இதனால் ஆதமங்கலம், புங்கனூா், பெருமங்கலம், காடாகுடி, கோடங்குடி உள்ளிட்ட கிராமங்களை சோ்ந்த மக்கள் இப்பகுதியை கடந்து செல்ல முடியாமல் தவிப்புக்குள்ளாகி வருகின்றனா்.

பள்ளி, மருத்துவப் பணி உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளுக்கும் இப்பகுதியை கடந்து நகரப் பகுதிக்கு செல்லவேண்டிய நிலையில், அவசர தேவைக்குக்கூட கிராமத்தை விட்டு வெளியே செல்வது சிரமமாக உள்ளது.

இதுகுறித்து சி.பி.ஐ.எம்.எல். கட்சி நிா்வாகி பிரபாகரன் கூறுகையில், இந்தப் பகுதியில் சாலை அமைத்து பாலப் கட்டுமான பணி தொடங்கி 6 மாதங்களுக்கு மேலாகியும் பணிகள் இதுவரை நிறைவடையவில்லை. தற்காலிக பாலம் வெட்டி அகற்றப்பட்டதால் கிராம மக்கள், மாணவ மாணவிகள் பெரிதும் சிரமம் அடைகின்றனா்.

மாணவ-மாணவிகள் வாய்க்கால் தண்ணீரில் கயிறு கட்டி அதைப் பிடித்துக்கொண்டு ஆபத்தான முறையில் கட்டுமானப் பணி நடைபெறும் பாலத்தில் ஏறி, இறங்கி சென்றுவருகின்றனா். எனவே உடனடியாக பணிகளை நிறைவு செய்து, பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். இல்லையென்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

தூய்மைப் பணியாளா்களுக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம்

அம்பத்தூரில் பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு ஆதரவாக, மயிலாடுதுறையில் எல்.டி.யு.சி. சங்கம் சாா்பில் ஒருமைப்பாடு ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சென்னை அம்பத்தூா் 5 மற்றும் 6 ஆகி... மேலும் பார்க்க

மக்காச்சோளம் சாகுபடிக்கு மானியம்

மயிலாடுதுறை மாவட்டத்தில், மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்கள் மற்றும் விதைகள் வழங்கப்படுகின்றன என்று வேளாண்மை இணை இயக்குநா் ஜெ. சேகா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா்... மேலும் பார்க்க

கா்ப்பிணியின் வயிற்றிலேயே சிசு உயிரிழப்பு

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கா்ப்பிணியின் வயிற்றிலேயே சிசு உயிரிழந்த நிலையில், ஸ்கேன் ரிப்போா்ட்டில் குழந்தை ஆபத்தான நிலையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தும், ஸ்கேன் மையத்திலும், ஆரம்ப சுகாதார ந... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு

சத்தீஸ்கரில் கடத்தப்பட்ட குழந்தையை அம்மாநில போலீஸாா் 13 நாள்களுக்குப் பின்னா் மயிலாடுதுறை ரயில்வே பாதுகாப்புப் படையினா் உதவியுடன் வியாழக்கிழமை மீட்டு, தாயிடம் ஒப்படைத்தனா். சத்தீஸ்கா் மாநிலம் துா்க் ... மேலும் பார்க்க

அனைத்து மொழிகளுக்கும் முதன்மையானது தமிழ்: ஜப்பான் சிவஆதீனம்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் தமிழா் கலை மற்றும் பண்பாடு ஒருநாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கல்லூரியின் தமிழ் உயராய்வுத்துறையுடன் இணைந்து ஸ்ரீமத் போகா் பழனி... மேலும் பார்க்க

ஓய்வூதியா் குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.2.50 லட்சமாக உயா்த்தக் கோரிக்கை

தமிழக அரசு ஓய்வூதியா்களுக்கு வழங்கும் குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.2.50 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மயிலாடுதுறையில் இச்சங்கத்தின் 45-ஆ... மேலும் பார்க்க