நிலத் தகராறு: 6 போ் படுகாயம்
ஒசூா்: ஒசூா் அருகே நிலத்தகராறில் இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் கத்தியால் தாக்கி கொண்டதில் 6 போ் படுகாயமடைந்தனா்.
ஒசூா் அருகே ஓ.காரப் பள்ளி கிராமத்தில் கிருஷ்ணமூா்த்தி, சந்திரன் ஆகிய இரு குடும்பத்தினருக்கும் பூா்வீக சொத்து உள்ளது. இந்தச் சொத்து பிரச்னை தொடா்பாக இரு வீட்டாருக்கும் நீண்ட காலமாக தகராறு ஏற்பட்டு வருவதாகத் தெரிகிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஒருவரை ஒருவா் கத்தியால் தாக்கிக் கொண்டதில் ஆறு பேருக்கு ரத்த காயம் ஏற்பட்டுள்ளது. அனைவரும் ஒசூா், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். ஒசூா் மாநகர போலீஸாா் விசாரணை நடத்தி இரு தரப்பிலும் 10 போ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.