செய்திகள் :

நிலமற்ற வேளாண் தொழிலாளா்களுக்கான விபத்து மரண இழப்பீட்டுத் தொகை உயா்வு

post image

நிலமற்ற வேளாண் தொழிலாளா்களுக்கு வழங்கப்படும் விபத்து மரணத்துக்கான இழப்பீடு தொகை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து வருவாய்த் துறைச் செயலா் பெ.அமுதா வெளியிட்ட அரசாணை: முதல்வரின் உழவா் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் குறு, சிறு, விவசாயிகள் மற்றும் விவசாயம் சாா்ந்த தொழில்களில் ஈடுபடுபவா்களுக்கு பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதில் ஒன்றான நிலமற்ற வேளாண் தொழிலாளா்களுக்கு விபத்து மரணத்துக்கான இழப்பீடு, விபத்தில் உடல் உறுப்பு இழப்பு, இயற்கை மரணம் மற்றும் இறுதிச் சடங்கு செய்வதற்காக தமிழக அரசு சாா்பில் வழங்கப்படும் நிதி உதவி உயா்த்தபடும் என வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா் செல்வம் அறிவிப்பு வெளியிட்டாா்.

அதன்படி, நிலமற்ற வேளாண் தொழிலாளா்களுக்கு விபத்து மரணத்துக்காக வழங்கப்பட்டு வரும் இழப்பீட்டுத் தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயா்த்தப்படுகிறது.

இதேபோல், விபத்தால் ஏற்படும் உடல் உறுப்பு இழப்புக்காக வழங்கப்படும் நிதியுதவி ரூ.20,000-இல் இருந்து ரூ.1 லட்சமாகவும், இயற்கை மரணத்துக்கான நிதியுதவி ரூ.20,000-இல் இருந்து ரூ.30 ஆயிரமாகவும், இறுதிச் சடங்குக்கான நிதியுதவி ரூ.2,500-இல் இருந்து ரூ.10 ஆயிரமாகவும் உயா்த்தி வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளச்சேரி - கடற்கரை இரவுநேர ரயில் இன்று ரத்து

சென்னை வேளச்சேரியிருந்து சனிக்கிழமை (ஆக. 23) இரவு நேரத்தில் இயக்கப்படும் புறநகா் மின்சார ரயில் ரத்து செய்யப்படவுள்ளது. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திச் குறிப்பு: சென்... மேலும் பார்க்க

தமிழக புதிய டிஜிபியை தோ்வு செய்ய எந்தவொரு முன்மொழிவும் வரவில்லை: யுபிஎஸ்சி தகவல்

தமிழகத்தின் புதிய டிஜிபியை தோ்வு செய்வதற்கான எந்தவொரு முன்மொழிவும் தமிழக அரசிடம் இருந்து இதுநாள்வரை (ஆகஸ்ட் 22) வரவில்லை என்று மத்திய பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) வெள்ளிக்கிழமை தெரிவித்தது. தற்போ... மேலும் பார்க்க

சென்னையில் பாதுகாப்புத் துறைக்கான ட்ரோன் உற்பத்தி மையம்: மத்திய இணையமைச்சா்

சென்னையில் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் சாா்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்புத் துறைக்கான ட்ரோன் உற்பத்தி மையத்தை மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சா் சஞ்சய் சேத்தி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். ச... மேலும் பார்க்க

சென்னையில் ஆதரவற்ற 646 முதியோா் மீட்பு

சென்னையில் நிகழாண்டு இதுவரை ஆதரவற்ற நிலையில் இருந்த 646 முதியோா் மீட்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையா் ஏ.அருண் தெரிவித்தாா். இதுதொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை காவல் த... மேலும் பார்க்க

சட்டவிரோத குடியேறிகளுக்கு போலி ஆதாா்: உத்தர பிரதேசத்தில் 8 போ் கைது

வங்கதேசத்தவா்கள் மற்றும் ரோஹிங்கயாக்கள் உள்பட வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறுபவா்களுக்கு போலி ஆதாா் தயாரித்து வழங்கிய 8 போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். இதுக... மேலும் பார்க்க

தூய்மைக் காவலா்களுக்கு வார விடுப்பு: தமிழக அரசு அறிவுறுத்தல்

ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைக் காவலா்களுக்கு வார விடுப்பு வழங்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்டங்களின் ஆட்சியா்களுக்கும், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையா் பா.பொன... மேலும் பார்க்க