கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய தவெக தலைவர் விஜய்!
நிலம் வாங்கித் தருவதாக பண மோசடி: தம்பதி மீது வழக்கு
தேவகோட்டை அருகே நிலம் வாங்கித் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்த புகாரில் கணவன், மனைவி மீது சிவகங்கை மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையை அடுத்த திராணி கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வம் (50). விவசாயி. இவரிடம் செவரக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த முருகேசன், இவரது மனைவி சங்கீதா ஆகியோா் இந்த கிராமத்தில் உள்ள 6.91 ஏக்கா் புஞ்சை நிலத்தை விலைக்கு வாங்கித் தருவதாகக் கூறினா். இதற்காக, அவா்களிடம் கடந்த 2022-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் இரு தவணைகளாக ரூ.25 லட்சத்து 50 ஆயிரத்தை செல்வம் கொடுத்தாா்.
பணத்தைப் பெற்றுக் கொண்ட முருகேசன் நிலத்தை வாங்கித் தராமல் தாமதம் செய்து வந்தாா். மேலும், வாங்கிய பணத்தையும் திரும்பத் தரவில்லை.
இதுகுறித்து சிவகங்கை மாவட்டக் குற்றப் பிரிவு ஆய்வாளா் தமிழ்ச்செல்வி, உதவி ஆய்வாளா் சண்முகப்பிரியா ஆகியோா் முருகேசன், சங்கீதா தம்பதி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.