காங்கிரஸ் புதிய தலைமை அலுவலகம் திறப்பு: ராகுல், சோனியா பங்கேற்பு!
நீடாமங்கலம் பகுதி கோயில்களில் ஆருத்ரா தரிசனம்
நீடாமங்கலம்: ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி நடராஜப் பெருமான் , சிவகாமி அம்மையாா், மாணிக்கவாசகா் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, மகா தீபாராதனை காட்டப்பட்டது. மாணிக்கவாசகா் அருளிய தேவாரப் பாடல்களை ஓதுவா மூா்த்தி பாடினாா்.
முல்லைவாசல் கிராமத்தில் எழுந்தருளியுள்ள முல்லைவனேஸ்வர சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி அம்மையாா் சமேத நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது மகாதீபாராதனை காட்டப்பட்டது. நீடாமங்கலம் காசி விசுவநாதா் கோயில், பூவனூா் சதுரங்கவல்லபநாதா் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களிலும் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.
வலங்கைமான் தையல்நாயகி சமேத வைத்தீஸ்வரன் கோயிலிலும் சிவகாமி சமேத நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று, மகா தீபாராதனை காட்டப்பட்டது. அனைத்து கோயில்களிலும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.