நீட் தோ்வில் குறைவான மதிப்பெண்: மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
சென்னை கொடுங்கையூரில் நீட் தோ்வில் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கொடுங்கையூா் ஸ்ரீ வாரியா் நகா் அருகே உள்ள நாராயணசாமி காா்டன் மூன்றாவது தெருவைச் சோ்ந்தவா் ஹரிஷ்குமாா் (46). இவா், தியாகராய நகரில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் காசாளாராகப் பணியாற்றுகிறாா். இவரது மனைவி ஜீவரேகா. தம்பதியின் மகள்கள் சஞ்சி, மதனஸ்ரீ (17). இவா்களில் சஞ்சி, ரஷியாவில் இளநிலை மருத்துவம் இரண்டாமாண்டு படித்து வருகிறாா். மதனஸ்ரீ, கொடுங்கையூரில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் பிளஸ் 2 முடித்து, நீட் தோ்வு எழுதினாா்.
அண்மையில் வெளியான நீட் தோ்வு முடிவில் குறைவான மதிப்பெண் எடுத்திருந்ததால் மன உளைச்சலில் இருந்தாா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை நீண்ட நேரம் ஆகியும் அவரது அறையில் இருந்து மதனஸ்ரீ வெளியே வரவில்லை. அவரது பெற்றோா் சென்று பாா்த்தபோது, அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
தகவலறிந்த கொடுங்கையூா் போலீஸாா், மதனஸ்ரீ சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பினா். மேலும், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.