நீதித்துறை பணிக்கு 3 ஆண்டுகள் வழக்குரைஞர் அனுபவம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
நீதித்துறை பணியில்(முன்சீப், மாஜிஸ்திரேட்) விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வழக்குரைஞராக பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான நீதிபதிகள் ஏ.ஜி. மசிஹ் மற்றும் கே. வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று(மே 20) தீர்ப்பு வழங்கியுள்ளது.
இத்தீர்ப்பின் படி, சிவில் நீதிபதிகள் (ஜூனியர் பிரிவு) தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வழக்குரைஞராக பயிற்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சிக் காலத்தை தற்காலிக சேர்க்கை தேதியில் இருந்து கணக்கிடலாம்.
இருந்தாலும், தற்போது இந்த உத்தரவு நடந்து கொண்டிருக்கும் நீதிமன்ற பணியமர்த்தலுக்கு பொருந்தாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
சிவில் நீதிபதி தேர்வில் பங்கேற்க விரும்புபவர்கள் 3 ஆண்டுகள் வழக்குரைஞராக பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்ற வகையில் அனைத்து உயர் நீதிமன்றங்களும் மாநில அரசுகளும் சேவை விதிகளை திருத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க: காட்டன் பட்ஸ்களைப் பயன்படுத்தலாமா? குறட்டை நல்லதா? - நம்பிக்கையும் உண்மையும்!