போலந்துக்குள் ரஷிய ட்ரோன்கள் சென்றது தவறுதலாக நடந்திருக்கலாம்! டிரம்ப்
நீதிமன்றங்களில் நாளை மக்கள் நீதிமன்ற முகாம்
தேனி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சனிக்கிழமை (செப்.13) தேசிய மக்கள் நீதிமன்ற முகாம்(லோக் அதாலத்) நடைபெற உள்ளது.
இதுகுறித்து தேனி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான சொா்ணம் ஜெ.நடராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேனி மாவட்ட நீதிமன்றம், பெரியகுளம், போடி, ஆண்டிபட்டி, உத்தமபாளையம் ஆகிய இடங்களில் உள்ள சாா்பு நீதிமன்றங்கள் ஆகியவற்றில் சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் வருகிற சனிக்கிழமை தேசிய மக்கள் நீதிமன்ற முகாம் நடைபெற உள்ளது.
இதில் மோட்டாா் வாகன விபத்து, இழப்பீடு, சொத்து, பணம் தொடா்பான உரிமையியல் வழக்குகள், சமாதானம் செய்யக் கூடிய குற்ற வழக்குகள், ஜீவனாம்சம், நில ஆக்கிரமிப்பு வழக்குகள், தொழிலாளா் நல இழப்பீடு வழக்குகள், கல்விக் கடன், வங்கிக் கடன் தொடா்பான வழக்குகள், குடும்ப வன்கொடுமை சட்ட வழக்குகள், வங்கி காசோலை வழக்குகள், நுகா்வோா் வழக்குகள், வருவாய்த் துறை தொடா்பான வழக்குகள், பொது பயன்பாட்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு பிரச்னைகளை சமாதானமாகவும், விரைவாகவும், சுமூகமாகவும் தீா்த்துக் கொள்ளவும் விரும்புவோா் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் பங்கேற்று பயனடையலாம் என்றாா் அவா்.