செய்திகள் :

நீதிமன்றம் கண்டனம்: இது கட்சிகளின் ஜனநாயக உரிமை! - ராகுலுக்கு இந்தியா கூட்டணி ஆதரவு

post image

சீனா ஆக்கிரமிப்பு குறித்த ராகுல் காந்தியின் பேச்சுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது பற்றி இன்று தில்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்திய - சீன எல்லையில் 2,000 சதுர கிலோமீட்டர் இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமித்துவிட்டதாக கடந்த 2022ல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் மேல்முறையீட்டு மனு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் ராகுல் காந்திக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி கண்டனம் தெரிவித்திருந்தனர்.

'இந்தியப் பகுதியை சீனா ஆக்கிரமித்தது உங்களுக்கு எப்படித் தெரியும்? ஆதாரங்கள் உள்ளதா? ஒரு உண்மையான இந்தியர் என்றால் நீங்கள்(ராகுல்) இப்படி பேசியிருக்கமாட்டீர்கள்?' என்று நீதிபதி தீபங்கர் தத்தா சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

சீனா ஆக்கிரமிப்பு குறித்து ராகுல் காந்தி ஒரு சில ஆண்டுகளாகவே பேசி வருவதாக சமூக வலைத்தளங்களில் பலரும் இதுதொடர்பாக பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று(ஆக. 5) காலை மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் சந்திப்பு நடைபெற்றது.

இதில் ராகுல் காந்தி, கார்கே, ஜெயராம் ரமேஷ், கனிமொழி, திருச்சி சிவா, சுப்ரியா சுலே உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.

பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக கூட்டத்தில் பேசப்பட்ட நிலையில், ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது பற்றியும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அதில் ராகுல் காந்திக்கு இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் இதுபற்றி,

"அரசியல் கட்சிகளின் ஜனநாயக உரிமைகள் குறித்து தேவையற்ற ஒரு கருத்தை தற்போது பதவியில் உள்ள நீதிபதிகள் கூறியுள்ளதாக இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

தேசிய நலன் சார்ந்த பிரச்னைகள் குறித்து கருத்து தெரிவிப்பது அரசியல் கட்சிகளின் குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவரின் பொறுப்பாகும்.

நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்க அரசு இவ்வளவு அழகாக தவறும்போது எல்லைகளை காக்க அவர்களை பொறுப்பேற்க வைப்பது ஒவ்வொரு குடிமகனின் தார்மீகக் கடமையாகும்" என்று பதிவிட்டுள்ளது.

Today during the morning meeting of the INDIA floor leaders, the remarks of judge of the Supreme Court on the Leader of Opposition Shri Rahul Gandhi was discussed.

இதையும் படிக்க | 'நீங்கள் உண்மையில் இந்தியராக இருந்தால்...' - ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

இதையும் படிக்க | சீன ஆக்கிரமிப்பு: 2019-ல் பாஜக எம்.பி. என்ன சொன்னார் தெரியுமா?

ம.பி: கோயிலில் கூட்டநெரிசல்! 2 பெண் பக்தர்கள் பலி... 5 பேர் படுகாயம்!

மத்தியப் பிரதேசத்தில், குப்ரேஷ்வர் தாம் கோயிலில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 2 பெண் பக்தர்கள் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சேஹூர் மாவட்டத்தில், இருந்து நாளை (ஆக.6) ஏராளமான பக்தர்கள் கன்வார் யாத... மேலும் பார்க்க

மறைந்த தாயின் வங்கிக் கணக்கு! ஒரே நாளில் ஷாருக் கானை விட பணக்காரரான இளைஞர்!

தன்னுடைய மறைந்த தாயின் தனியார் வங்கிக் கணக்கில் திடீரென ரூ.1,13,56,000 கோடி வரவு வைக்கப்பட்டதால் பாலிவுட் நடிகர் ஷாருக் கானை விட ஒரே நாளில் பணக்காரராகியிருக்கிறார் இளைஞர் ஒருவர்.வாயைப் பிளந்துகொண்டு அ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில்.. நக்சல்கள் வெடிகுண்டு தாக்குதல்! இளைஞர் படுகாயம்!

சத்தீஸ்கரில் நக்சல்கள் பொருத்திய வெடிகுண்டு வெடித்ததில், 24 வயது இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பிஜப்பூர் மாவட்டத்தின், குஞ்சேபார்தி கிராமத்தின் அருகில், பிரமோத் காக்கேம் (வயது 24) எனும் இளைஞர் ஒர... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம்! இன்னொருபுறம் பாஜக கொண்டாட்டம்

ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் வெடித்தது.ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு இன்றுடன் ஆறாண்டுகள் நிறைவடைந்ததையொட... மேலும் பார்க்க

பூமியிலிருந்தும் வானிலிருந்தும் நெருப்புப் பிழம்புகள்! இது பாபா வங்காவின் ஆகஸ்ட் மாத கணிப்பு!!

பல்கேரிய நாட்டைச் சேர்ந்த ஆச்சரியத்துக்குரிய பாபா வங்கா, ஆகஸ்ட் மாதம் இரட்டை நெருப்புப் பிழம்புகள் உருவாகும் என்ற கணிப்பு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.கடந்த 1996ஆம் ஆண்டிலேயே மறைந்துவிட்ட ப... மேலும் பார்க்க

இலக்குகளை துல்லியமாக தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணைகள் அதிகளவில் கொள்முதல்! எதற்காக தெரியுமா?

பிரம்மோஸ் ஏவுகணைகளை அதிகளவில் கொள்முதல் செய்யவிருப்பதாக பாதுகாப்பு துறையை சார்ந்த உயர்நிலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.பாதுகாப்பு விவகார அமைச்சகத்தின் உயர்நிலை ஆலோசனை கூட்டத்தில், இந்திய கடற்படை போர் க... மேலும் பார்க்க