செய்திகள் :

நீருக்குள் கூட புகைப்படம் எடுக்கலாம்: ஆக. 4-ல் அறிமுகமாகிறது விவோ ஒய் 400!

post image

விவோ நிறுவனம் ஒய் 400 5ஜி என்ற புதிய ஸ்மார்ட்போனை ஆகஸ்ட் 4 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. அறிமுக தேதி அறிவிக்கப்பட்டதையொட்டி, புதிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.

செய்யறிவு தொழில்நுட்பங்கள், பேட்டரி திறன் மற்றும் கேமரா மேம்பாடுகள் போன்றவை இந்த ஸ்மார்ட்போனின் சிறப்புகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்ட விவோ நிறுவனம் இந்திய பயனர்களைக் கவரும் வகையிலான ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகின்றன. தற்போது விவோ ஒய் 400 என்ற புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் விவோ அறிமுகம் செய்யவுள்ளது.

விவோ ஒய் 400 சிறப்பம்சங்கள்

விவோ ஒய் 400 ஸ்மார்ட்போனானது, 6.67 அங்குல அமோலிட் திரை கொண்டது. சுமுகமாக திரை இயங்கும் வகையில் 120Hz திறன் கொண்டது. வெளிப்புற பயன்பாட்டின்போது திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 1800 nits திறன் வழங்கப்பட்டுள்ளது.

பின்புறம் 50MP கேமராவுடன் சோனி நிறுவனத்தின் IMX852 லென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. 2MP டெப்த் சென்சார் உடையது. நீருக்குள் இருந்தபடி புகைப்படம் எடுக்கலாம் என விவோ நம்பிக்கை வழங்குகிறது. நீர் மற்றும் தூசு புகாத்தன்மைக்காக IP68/69 திறன் வழங்கப்பட்டுள்ளது.

செய்யறிவு தொழில்நுட்பத்தில் பல புதிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.

ஒலியை பல மொழிகளில் எழுத்தாக மாற்றக்கூடிய செய்யறிவு அம்சம் வழங்கப்பட்டுள்ளது.

பெரிய பத்தி உடைய சொற்களை அடுக்கவும், திருத்தவும் செய்யும்.

விடியோக்களில் இருந்தும் அதன் தரவுகளை வார்த்தைகளாக விவரிக்கும்.

கோப்புகளை பல்வேறு ஃபார்மட்களில் வழங்கும்

கேமராவில் ஒரு பொருளைக் காண்பித்தால், அது குறித்த மொத்த தரவுகளையும் எழுத்துகளாக காண்பிக்கும்.

புகைப்படங்களில் தேவையற்ற பின்புறங்களை நீக்கிக்கொள்ளும் செய்யறிவு அம்சங்கள் உள்ளடக்கியுள்ளது.

இத்தனை செய்யறிவு அம்சங்கள் உடைய ஸ்மார்ட்போன் விலை ரூ. 20,000.

விரைவில் டாக்ஸி பயன்பாட்டுக்கு அறிமுகமாகும் கியா கேரன்ஸ் இவி!

கியா நிறுவனம் வணிக பயன்பாட்டுக்கான தனது முதல் இவி காரை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.கியா நிறுவனம் ஏற்கெனவே அறிமுகம் செய்து பெரும் வரவேற்பை பெற்று வரும் கேரன்ஸ் இவி மாடல் போன்ற காரைதான் வணிக பயன்பாட்... மேலும் பார்க்க

ரூ. 2,800 இருந்தால் போதும்..! ஏஐ பிளஸ் நோவா 5ஜி ஸ்மார்ட்போன்!

குறைந்த விலைக்கு ஏஐ பிளஸ் நிறுவனத்தின் நோவா மாடல் 5 ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்தியாவின் குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வரும் ஏஐ பிளஸ் நிறுவனம், தற்போது அதிதிறன் கொண்ட ... மேலும் பார்க்க

ரூ.6 லட்சம் இருந்தால் போதுமா.?! நவீன வசதியுடன் ரெனால்ட் டிரைபர் பேஸ்லிஃப்ட்!

ரெனால்ட் நிறுவனத்தின் 7 இருக்கைகளுடன் எம்.பி.வி. காரான டிரைபர் சில மாற்றங்களுடன் பேஸ்லிஃப்ட்டாக அறிமுகமாகியுள்ளது. தற்போதைய மாடலுடன் ஒப்பிடுகையில் இந்த காரில் 30-க்கும் மேற்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்ட... மேலும் பார்க்க

ஏசியன் பெயிண்ட்ஸ் முதல் காலாண்டு லாபம் 6% சரிவு!

புதுதில்லி: ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 5.87 சதவிகிதம் குறைந்து ரூ.1,117.05 கோடியாக இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. அலங்கார பெயிண்டிற்கான தேவை குறைந்ததே இதற்குக் முக்கிய... மேலும் பார்க்க

2025ல் இந்தியாவிற்கான பாமாயில் ஏற்றுமதி 5 மில்லியன் டன்னாக இருக்கும்: இந்தோனேசியா

புதுதில்லி: இறக்குமதி வரிகளைக் குறைக்க இந்தியா முடிவு செய்ததையடுத்து 2024ஆம் ஆண்டில் 4.8 மில்லியன் டன்களிலிருந்து 2025ஆம் ஆண்டு பாமாயில் ஏற்றுமதி 5 மில்லியன் டன்னுக்கு அதிகமாக இருக்கும் என மூத்த தொழில... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ.86.82 ஆக நிறைவு!

மும்பை: எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு டாலர் தேவை அதிகரித்ததால் இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ.86.82 ஆக நிறைவடைந்தது. இந்... மேலும் பார்க்க