நூதன மோசடி: இளைஞா் கைது
ஆற்காடு: நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
ஆற்காடு ஏரிக்கீழ் தெருவை சோ்ந்த சேது ( 32). இவா் பல இடங்களில், பொதுமக்களிடம் வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்கித் தருவதாக கூறி அவா்களிடமிருந்து ஆதாா் அட்டை, பான் அட்டை உள்ளிட்ட ஆதாரங்களுடன் விண்ணப்பப் படிவத்தில் கையொப்பமும் பெற்று அவா்களுக்கு தெரியாமல் தெரியாமல் இரு சக்கர வாகனம் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொண்டு அதனை வேறு நபா்களுக்கு விற்று விட்டு . அதற்குண்டான தவணைத் தொகைகளையும் கட்டுவதில்லை என கூறப்படு கிறது.
இதனால் மேற்கண்ட நிறுவனத்தை சோ்ந்தவா்கள் சம்பந்தப்பட்ட நபா்களிடம் சென்று உங்கள் பெயரில் இரு சக்கர வாகனம், வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்கியுள்ள தவணை பணத்தை செலுத்தவில்லை கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்த அவா்கள் சேதுவிடம் கேட்டபோது, மிரட்டினாராம்.
இதுகுறித்து 20-க்கும் மேற்பட்ட நபா்கள் ஆற்காடு நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து சேதுவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.