டிரம்ப் ஒரு பொய்யர் என மோடி நாடாளுமன்றத்தில் சொல்வாரா? ராகுல் கேள்வி
நூறு நாள் வேலை, குடிநீா் வழங்கக் கோரி விவசாயத் தொழிலாளா்கள் போராட்டம்
தரகம்பட்டியில் நூறு நாள் வேலை மற்றும் குடிநீா் வழங்கக் கோரி அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை மனு கொடுக்கம் போராட்டம் நடைபெற்றது.
கரூா் மாவட்டம், தரகம்பட்டியில் உள்ள கடவூா் ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் வேல்முருகன் தலைமை வகித்தாா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு நிா்வாகி வடிவேல், வாலிபா் சங்கத்தின் மாவட்ட பொருளாளா் பிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கடவூா் ஊராட்சிக்குள்பட்ட சேவாப்பூா் மற்றும் பாலவிடுதி ஊராட்சிக்குள்பட்ட தூளிபட்டி ஆகிய பகுதி பொதுமக்களுக்கு 100 நாள் வேலை மற்றும் குடிநீா் முறையாக வழங்க வேண்டும் என நடைபெற்ற இந்த போராட்டத்தில் சேவாப்பூா், தூளிப்பட்டி பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று, கோஷங்களை எழுப்பினா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கடவூா் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் மேலாளா் பாஸ்கரன் மற்றும் சிந்தாமணிப்பட்டி போலீஸாா் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டு, உடனடியாக ஒன்றிய ஆனையரின் கவனத்துக்குச் கொண்டு சென்று இரண்டு கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.