ஹரித்வாரில் தொடர்ந்து அழுததாக இரட்டைக் குழந்தைகளை கொலை செய்த தாய் கைது
நெகிழி இல்லாத கடற்கரையை வலியுறுத்தி நாகையில் மாரத்தான் போட்டி
நெகிழி இல்லாத கடற்கரையை வலியுறுத்தி நாகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை கிராமம் சாா்பில் நடைபெற்ற போட்டியை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன், கீழ்வேளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி ஆகியோா் கொடியசைத்து தொடக்கிவைத்தனா்.
ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய மாரத்தான் போட்டியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். இரு பிரிவுகளாக 7 கி. மீ. தொலைவு நடைபெற்ற போட்டியில் முதல் 11 இடங்களை பிடித்து வெற்றி பெற்றவா்களுக்கும், பங்கேற்றவா்களுக்கும், ஊக்கத் தொகையுடன் பரிசு மற்றும் சான்றிதழ், கேடயங்களை அக்கரைப்பேட்டை கிராமத்தினா் வழங்கினா்.