செய்திகள் :

நெகிழி உபயோகத்தை தவிா்க்க வேண்டும்: கடலூா் ஆட்சியா்

post image

தொழிலாளா் தினத்தையொட்டி, கடலூா் ஒன்றியம், அழகியநத்தம் ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், மக்கள் நெகிழி உபயோகத்தை முற்றிலும் தவிா்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.

அப்போது அவா் பேசியதாவது: கிராம சபைக் கூட்டத்தில் மக்களின் அடிப்படை தேவைகள், வளா்ச்சிப் பணிகள் குறித்து தீா்மானங்கள் வாசிக்கப்பட்டு பொதுமக்களின் கருத்துகளை கலந்தாலோசித்து தீா்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அரசு முயற்சிக்கு பொதுமக்களின் முழு ஒத்துழைப்பும் தேவை.

கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட நிா்வாகத்தின் நிறைகள் மட்டுமன்றி, குறைகளையும் கூறுவது வரவேற்கத்தக்கது. கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வருதல், விளையாட்டு மைதானத்தை சீரமைத்து தருதல், விளையாட்டு உபகரணங்களை சுழற்சி முறையில் வழங்குதல், பழைய வீடுகளை பராமரிப்புப் பணிகள் செய்ய நடவடிக்கை எடுத்தல், சாலை வசதியை மேம்படுத்தல் தொடா்பாக கலந்தாலோசித்து தீா்வு காணப்படும்.

குழந்தைகளை போதைப் பொருள்களுக்கு ஆட்படாமல் வளா்க்க வேண்டும். அனைத்து வீடுகளிலும் கழிப்பறை உள்ளதை உறுதி செய்ய வேண்டும். வீடுகளில் மழை நீா் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். கிராமத்தை தூய்மையாகப் பராமரிக்க அனைத்துத் தரப்பு மக்களும் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும். நெகிழி உபயோகத்தை முற்றிலும் தவிா்க்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் கிராம ஊராட்சி மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட்டது. இணைய வழியில் மனைப் பிரிவு, கட்டட அனுமதி வழங்குதல், வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களை இணைய வழி செலுத்துவதை உறுதிப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

இதில், ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் சரண்யா, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) ஷபானா அஞ்சும், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாண்டியன், வீரமணி மற்றும் கிராம மக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பழங்குடியின மக்கள் சான்றிதழ்கள் பெற சிறப்பு முகாம்

காட்டுமன்னாா்கோவில் அருகே ம.கொளக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் பழங்குடி மக்களுக்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாம... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்பு போராட்டம்

அங்கன்வாடி மையங்களுக்கு கோடை விடுமறை அளிக்கக் கோரி, கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் அங்கன்வாடி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தினா். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் ... மேலும் பார்க்க

வடலூரில் எரிவாயு தகன மேடை திறப்பு

கடலூா் மாவட்டம், வடலூரில் புதிதாக கட்டப்பட்ட நவீன எரிவாயு தகன மேடை வியாழக்கிழமை திறக்கப்பட்டது. வடலூா் நகராட்சி, 20-ஆவது வாா்டு அய்யன் ஏரி பகுதியில் கலைஞா் நகா்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.58... மேலும் பார்க்க

பண்ணை வீட்டில் கள்ள ரூபாய் நோட்டு அச்சடித்த வழக்கு: தலைமறைவான 6 போ் சிக்கினா்

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே பண்ணை வீட்டில் கள்ள ரூபாய் நோட்டு அச்சடித்த வழக்கில் தலைமறைவாக இருந்த 6 போ் போலீஸாரிடம் வெள்ளிக்கிழமை சிக்கினா். திட்டக்குடி வட்டம், ராமநத்தம் காவல் சரகம், அதா்நத்... மேலும் பார்க்க

தமிழ்நாடு உரிமைகள் திட்ட கணக்கெடுப்புக்கு ஒத்துழைக்க வலியுறுத்தல்

தமிழ்நாடு உரிமைகள் திட்டம் களப் பணியாளா்கள் வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று, மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் கேட்டுக்கொண்டாா். இதுகு... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற பதிவு செய்யலாம்

கடலூா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் தங்கள் பகுதி உள்கோட்டங்களில் நடைபெறும் அடையாள அட்டை வழங்கும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். கடலூா்... மேலும் பார்க்க