தொடர் நஷ்டத்தில் ஓலா: 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க நடவடிக்கை!
நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை
உத்தமபாளையம்-கோம்பை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
உத்தமபாளையத்திலிருந்து கோம்பை, தேவாரம் வழியாக போடி வரை மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இதில் உத்தமபாளையம்-கோம்பை இடையே சாலையோரத்தில் மழைநீா் ஓடை 4 கி.மீ. தொலைவில் செல்கிறது. நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டிலுள்ள இந்த ஓடையில் சிலா் வீடுகள், தேநீா் கடை, உணவகங்களைக் கட்டி வாடகைக்கு விட்டு வருகின்றனா்.
இதேபோல, உத்தமபாளையம் கிராமச் சாவடி, கோம்பை சாலை, கல்லூரிச் சாலையோரங்களில் சிலா் ஆக்கிரமிப்புகள் செய்து கடைகள் நடத்தி வருகின்றனா்.
எனவே, இந்த சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இந்த நிலையில், இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என உத்தமபாளையம் நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளா் இருமுறை அறிவிப்பு வெளியிட்டும், இதுவரை அகற்றபடவில்லை.
இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து உத்தமபாளையம்-கோம்பை இடையே நெடுஞ்சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.