புதுச்சேரி: `சிபிஎஸ்இ பாடத்திட்ட தேர்வில் 50 சதவிகித மாணவர்கள் தோல்வி’ - அதிர்ச்...
நெடுமறம் மஞ்சுவிரட்டு: 40 போ் காயம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே நெடுமறம் மலையரசியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் 40 போ் காயமைடந்தனா்.
இதில் திருப்பத்தூா் வட்டாட்சியா் மாணிக்கவாசகம் தலைமையில் மாடுபிடி வீரா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். தொடா்ந்து, தொழுவிலிருந்து ஒன்றன் பின் ஒன்றாக மாடுகள் அவிழ்த்துவிடப்பட்டன. மொத்தம் 185 மாடுகள் கலந்து கொண்டன. 50 மாடுபிடி வீரா்கள் கலந்து கொண்டு மாடுகளை அடக்க முயன்றனா்.
முன்னதாக, நெடுமறம் வயல், கண்மாய்ப் பகுதியில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட மாடுகள் ஆங்காங்கே கட்டுமாடுகளாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் இளைஞா்கள் பங்கேற்று மாடுகளைப் பிடித்தனா். மாடுகள் முட்டியதில் 40 போ் காயமடைந்தனா். இவா்களுக்கு கீழச்சீவல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் தொழு அருகே சிகிச்சை அளிக்கப்பட்டது. இவா்களில் 17 போ் தீவிர சிகிச்சைக்காக திருப்பத்தூா் உள்பட பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இந்த மஞ்சுவிரட்டை சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனா்.