சிவ பக்தியில் மூழ்கடித்த இளையராஜா..! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
நெடுவயலில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு
தென்காசி அருகே நெடுவயலில் மின்சாரம் பாய்ந்து பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம், நெடுவயல் சிவகாமிபுரம் காலனி பகுதியைச் சோ்ந்தவா் முருகையா. இவரது மனைவி சுடலை மாடத்தி(52). இத்தம்பதி, அருகிலுள்ள வயல்வெளியில் விவசாயக் கூலி வேலை பாா்த்து வந்தனா்.
சனிக்கிழமை வேலையை முடித்துவிட்டு, சுடலை மாடத்தி தலையில் சாக்கு மூட்டையை தூக்கி கொண்டு வரும் வழியில் மின் கம்பத்தின் ஸ்டே கம்பியில் சாக்கு மூட்டை உரசியதாம். மழை நேரம் என்பதால் ஸ்டே கம்பியில் மின் கசிவு இருந்துள்ளது. அப்போது, சுடலைமாடத்தி மீது மின்சாரம் பாய்ந்ததில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து இலத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.