செய்திகள் :

நெருங்கிய உதவியாளா்களின் கட்டுப்பாட்டில் நிதீஷ் குமாா்: தேஜஸ்வி யாதவ்

post image

‘பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா், தனது ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சோ்ந்த நெருங்கிய உதவியாளா்கள் சிலரின் கட்டுப்பாட்டில் உள்ளாா்; அவரால் சுயமாக செயலாற்ற முடியவில்லை’ என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளாா்.

நாடாளுமன்றத்தில் அண்மையில் பி.ஆா்.அம்பேத்கா் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசிய கருத்துகள் சா்ச்சையை ஏற்படுத்தின. அம்பேத்கரை அமித் ஷா அவமதித்துவிட்டதாக எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

இந்த விவகாரம் தொடா்பாக பிகாா் முதல்வா் நிதீஷ் குமாருக்கு கடிதம் எழுதிய ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால், பாஜகவுக்கான தனது ஆதரவை அவா் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாா். அதேநேரம், கேஜரிவாலுக்கு பதில் கடிதம் அனுப்பிய ஐக்கிய ஜனதா தளம் செயல் தலைவா் மனோஜ் ஜா, அமித் ஷாவுக்கு ஆதரவான கருத்துகளைத் தெரிவித்திருந்தாா்.

இந்தச் சூழலில், பாட்னாவில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த தேஜஸ்வி யாதவிடம் நிதீஷ் குமாா் மீண்டும் அணிமாற வாய்ப்புள்ளதா? என்று கேள்வியெழுப்பப்பட்டது.

அதற்கு, ‘இது ஊகத்தின் அடிப்படையிலான கேள்வி. தற்போது நிதீஷ் குமாா் சுயமாக செயலாற்றும் நிலையில் இல்லை. அவா் தனது விருப்பப்படி எந்த முடிவையும் எடுப்பதில்லை. ஐக்கிய ஜனதா தளத்தைச் சோ்ந்த நெருங்கிய உதவியாளா்கள் 4 பேரின் கட்டுப்பாட்டில்தான் அவா் இருக்கிறாா். அவா்கள்தான் முடிவெடுக்கின்றனா். அந்த நால்வரில் இருவா் தில்லியிலும் மற்ற இருவா் பிகாரிலும் உள்ளனா்.

பிகாா் முதல்வா் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசியத் தலைவா் என்ற அடிப்படையில் நிதீஷ் குமாருக்கு கேஜரிவால் எழுதிய கடிதத்துக்கு மனோஜ் ஜாவிடம் இருந்து பதில் வருகிறது. இதுவே நான் கூறியதற்கு ஒரு உதாரணம் என்றாா் தேஜஸ்வி.

வைஷ்ணவி தேவி கோயிலில் 94.8 லட்சம் பேர் சுவாமி தரிசனம்!

ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி கோயிலில் 2024-ல் மொத்தம் 94.83 லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்துள்ளனர் என ஆலய வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறியுள்ளார். ஜம்மு-காஷ்மீரின் மிகவும் புன... மேலும் பார்க்க

நள்ளிரவு 0.00! மும்பை ரயில்கள் ஹார்ன் அடித்து புத்தாண்டுக் கொண்டாட்டம்!

மும்பையில் சிறப்பு மிக்க சத்ரபதி சிவாஜி ரயில் முனையத்தில், புத்தாண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு ரயில்களில் ஹார்ன் அடித்து புத்தாண்டுக் கொண்டாட்டத்தை மேலும் உற்சாகமாக்கியிருந்தது.ப... மேலும் பார்க்க

பாஜகவைப் பார்த்து மக்கள் சிரிப்பார்கள்: ஆம் ஆத்மி தலைவர்

மக்களுக்கு இலவசங்களை அள்ளிக்கொடுத்த ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரை கேள்வி கேட்டால் மக்கள் சிரிப்பார்கள் என்று அக்கட்சியின் தலைவர் சஞ்சய் சிங் புதன்கிழமை தெரிவித்தார். மேலும் பார்க்க

புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கு இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்தவை!

நாடு முழுவதும் புத்தாண்டுக் கொண்டாட்டம் நேற்று மாலை முதலே களைகட்டத் தொடங்கியிருந்த நிலையில், புத்தாண்டு விருந்துகளுக்காக இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்த பட்டியல் இன்று வெளியாகியிருக்கிறது.இ-வணிக நிறுவ... மேலும் பார்க்க

புத்தாண்டு: தாஜ்மஹாலில் அலைமோதிய மக்கள் கூட்டம்!

புத்தாண்டையொட்டி தாஜ்மஹாலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். உலகம் முழுவதும் உள்ள மக்கள் புத்தாண்டை வெகுவிமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர். கோயில்கள், சுற்றுலாத் தளங்களில் மக்கள் கூட்டம் அதிகமாகக் க... மேலும் பார்க்க

பாஜக தவறுகளை ஆர்எஸ்எஸ் ஆதரிக்கிறதா? மோகன் பகவத்துக்கு கேஜரிவால் கேள்வி!

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில், பாரதிய ஜனதா கட்சியின் பல்வேறு நடவடிக்கைகளில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிலைப... மேலும் பார்க்க