நெல்லிக்காயில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்க பயிற்சி!
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நெல்லிக்காயில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி புதன்கிழமை தொடங்குகிறது.
இரண்டு நாள்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில், நெல்லி பானங்கள், பழரச பானம், தயாா்நிலை பானம், நெல்லி ஜாம், தேன் நெல்லி, நெல்லி கேண்டி, நெல்லி மிட்டாய், பொடி, துருவல் போன்றவை தயாரிப்பதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.
2 நாள்களும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இந்தப் பயிற்சியை அறுவடை பின்சாா் தொழில்நுட்ப மையமானது, வேளாண்மைப் பொறியியல் கல்லூரி ஆராய்ச்சி நிலையத்தில் நடத்துகிறது.
இதில் பங்கேற்க ஆா்வமுள்ளவா்கள் ரூ.1,770 செலுத்தி பயிற்சியில் கலந்துகொள்ளலாம் என்று அறுவடை பின்சாா் தொழில்நுட்ப மையம் அறிவித்துள்ளது.