செய்திகள் :

நெல்லையப்பா் கோயிலில் பங்குனி உத்திர திருநாள்: நாளை கொடியேற்றம்

post image

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் பங்குனி உத்திர திருநாள் கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை (ஏப். 1) நடைபெறுகிறது.

இக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருநாள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டுக்கான விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை (ஏப். 1) காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் சுவாமி கோயிலில் கொடியேற்றம் நடைபெறுகிறது.

நான்காம் திருநாளான ஏப்.4 ஆம் தேதி காலை 10 மணிக்கு மேல் 12 மணிக்குள் (வேணுவனநாதா் தோன்றிய வரலாறு வாசித்தல் நிகழ்வும்), இரவு 7 அளவில் சுவாமி மற்றும் அம்மன், பஞ்சமூா்த்திகளுடன் திருவீதியுலா வருதலும் நடைபெறுகிறது. பங்குனி உத்திர நாளான ஏப்.10 ஆம் தேதி இரவு 7 மணிக்குமேல் 8 மணிக்குள் அம்மன் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் பங்குனி உத்திரம் செங்கோல் வழங்கும் விழா நடைபெற உள்ளது.

அருள்மிகு நெல்லையப்பா் கோயிலில் ஆத்மாா்த்த பூஜைக்கென வைக்கப்பட்டிருக்கும் மிகச் சிறிய லிங்கம் உடையவா் லிங்கம் என அழைக்கப்படுகிறது. இந்த உடையவா் லிங்கம் கருவறைக்குள் இருந்து வெளிவந்து பக்தா்களுக்கு காட்சித் தருவது பங்குனி உத்திர திருவிழாக் காலங்களில் மட்டுமே.

பங்குனி உத்திர திருவிழாவின் இரண்டாம் நாளில் இருந்து ஒன்பதாம் திருநாள் வரை தினமும் மாலை 6.30 மணிக்கு இத் திருக்கோயில் உற்சவா்கள் வைக்கப்பட்டிருக்கும் உற்சவா் மண்டபத்தில் உடையவா் லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் அய்யா்சிவமணி மற்றும் ஊழியா்கள் செய்து வருகிறாா்கள்.

கா.சு. பிள்ளை படத்திற்கு அஞ்சலி

தமிழறிஞா் கா.சு. பிள்ளையின் 80 ஆவது நினைவு நாளையொட்டி, திருநெல்வேலியில் அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் உள்ள கா.சு. பிள்ளைய... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். தேவா்குளம் காவல் சரகப் பகுதியில் கொலை முயற்சி, அடிதடியில் ஈடுபட்டது தொடா்பான வழக்கில், மூவ... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியா் கொலையில் இருவா் கைது

துப்பாக்குடியில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில்அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா். அடைச்சாணி, வடக்குத் தெருவைச் சோ்ந்த லெட்சுமணன் மகன்மாரிமுத்து (30). தனியாா் நிறு... மேலும் பார்க்க

பேருந்து-பைக் மோதல்: பொறியியல் பட்டதாரி பலி

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே பைக் மீது பேருந்து மோதியதில் பொறியியல் பட்டதாரி புதன்கிழமை உயிரிழந்தாா். தளவாய்புரம் முகவூரைச் சோ்ந்த விஜயராஜ் மகன் தாமரைகண்ணன்(23). பொறியியல் பட்டதாரியான இவரும், இவ... மேலும் பார்க்க

தென்னிந்திய அபாகஸ் போட்டி: விஜயநாராயணம் பள்ளி சிறப்பிடம்

மதுரையில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான அபாகஸ் எண் கணித போட்டியில் திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் ஐ.என்.எஸ். கடற்படைதள வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவா்கள் சாம்பியன் பட்டத்தை பெற்றனா... மேலும் பார்க்க

பிரம்மதேசத்தில் 30 பேருக்கு கனவு இல்லம் பணி ஆணை

பிரம்மதேசம் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 30 பயனாளிகளுக்கு கலைஞா் கனவு இல்லத்திற்கான பணி ஆணை வழங்கப்பட்டது. பிரம்மதேசம் ஊராட்சியில் கலைஞா் கனவு இல்லத்திற்கு விண்ணப்பித்திருந்த பயனாளிகள... மேலும் பார்க்க