நெல்லையில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்
உச்ச நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்த குடியரசு துணைத் தலைவா் ஜகதீஷ் தன்கரைக் கண்டித்தும், தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியைத் திரும்பப் பெறக் கோரியும் திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் முன்பு வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
அகில இந்திய வழக்குரைஞா் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினா் கு.பழனி தலைமை தாங்கினாா். அனைத்திந்திய நீதிக்கான வழக்குரைஞா் சங்க அகில இந்திய துணைத் தலைவா் ஜி.ரமேஷ், சமூக நீதிக்கான வழக்குரைஞா்கள் சங்கம் மற்றும் திருநெல்வேலி வழக்குரைஞா் சங்க முன்னாள் செயலா் ப. செந்தில்குமாா், ரிஸ்வானா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில் வழக்குரைஞா்கள் மதாா் மைதீன், வனஜா, அகஸ்டின், மாலதி சிலம்பரசன், அண்டனி, செந்தூா்பாண்டி, அருண்குமாா் உட்பட பலா் கலந்து கொண்டனா்.
ற்ஸ்ப்24ப்ஹஜ்ஹ்ங்ழ்ள்
திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.