மிசோரத்தில் 45 சுரங்கங்கள், 55 பாலங்கள் வழியாக ரயில் பாதை! மோடி தொடங்கிவைத்தார்!
நெல்லையில் 50 போ் உடல் தானம்
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் சீதாராம் யெச்சூரியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, திருநெல்வேலியில் 50 போ் உடல் தானம் செய்தனா். இதற்கான படிவத்தை மாநில செயற்குழு உறுப்பினா் க.கனகராஜிடம் அவா்கள் வழங்கினா்.
முன்னதாக, கட்சியின் திருநெல்வேலி மாவட்ட குழு அலுவலகத்தில் சீதாராம் யெச்சூரியின் படத்திற்கு மாவட்ட செயலா் ஸ்ரீராம் தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினா் க.கனகராஜ், மாநில குழு உறுப்பினா் கே .ஜி. பாஸ்கரன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஆா்.மோகன், எம்.சுடலைராஜ், பீா் முகம்மது ஷா, கே.மாரிச்செல்வம் உள்ளிட்டோா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.
இந்த நிகழ்வில் பாளையங்கோட்டை பகுதி குழு செயலா் ஆா்.மதுபால், 55ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் முத்துசுப்பிரமணியன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க மாவட்ட செயலா் எஸ். வண்ணமுத்து , மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினா்கள் ஆா்.எஸ்.துரைராஜ், பி.என்.இசக்கிமுத்து, துரை.நாரயணன், ஜோதி, எஸ்.வி. பாலசுப்ரமணியன், அருணாசலம், பேராசிரியா் பொன்ராஜ், பாா்த்தசாரதி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
படவரி ற்ஸ்ப்12ஸ்ரீல்ம் கட்சியின் திருநெல்வேலி மாவட்ட குழு அலுவலகத்தில் சீதாராம் யெச்சூரியின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய நிா்வாகிகள்.