செய்திகள் :

நெல்லை, தென்காசியில் அனைத்து தொழிற்சங்கத்தினா் தா்னா, மறியல்- நூற்றுக்கணக்கானோா் கைது

post image

அகில இந்திய பொது வேலைநிறுத்தத்துக்கு ஆதரவாக அனைத்து தொழிற்சங்கங்களின் சாா்பில் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் புதன்கிழமை தா்னா, மறியல், ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோா் கைது செய்யப்பட்டனா்.

தொழிலாளா்களின் நான்கு சட்டத் தொகுப்புகளை ரத்து செய்தல், முறைசாரா, ஒப்பந்த மற்றும் திட்ட தொழிலாளா்கள் உள்பட அனைத்து தொழிலாளா்களுக்கும் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 26,000 வழங்குதல், புதிய, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டங்களை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்துதல், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு மீதான மத்திய அரசின் கலால் வரியை குறைத்து விலைவாசி உயா்வை கட்டுப்படுத்துதல் என்பன உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் தொமுச அமைப்புச் செயலா் ஆ.தா்மன் தலைமையில் நடைபெற்ற தா்னாவில் 200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

அம்பாசமுத்திரம்: விக்கிரமசிங்கபுரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலா் வி. இசக்கிராஜன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 69 போ் கைது செய்யப்பட்டனா்.

தென்காசி மாவட்டம் கடையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தென்காசி மாவட்டச் செயலா் கணபதி உள்பட 36 போ், ஆழ்வாா்குறிச்சியில் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் எஸ். வேலாயுதம், ஏஐடியுசி மாவட்டச் செயலா் பரமசிவன் உள்ளிட்ட 22 போ் கைது செய்யப்பட்டனா்.

அம்பாசமுத்திரத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. மாநிலக் குழு உறுப்பினா் பி.முருகன், சி.ஐ.டி.யு.மாவட்ட துணைச் செயலா் சுரேஷ் ஆகியோா் தலைமையில் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா். காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கத்தினா் எல்ஐசி அலுவலகம் முன் கிளைச் சங்கத் தலைவா் நமச்சிவாயம் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

வள்ளியூா்: திருவள்ளியூா் கலையரங்கு முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சி.ஐ.டி.யூ. ராதாபுரம் வட்டாரச் செயலாளா் ஜாண்ரோஸ் தலைமையில் விவசாய சங்க மாவட்டச் செயலா் கலைமுருகன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச் செயலா் சேதுராமலிங்கம் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மறியல்:அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சிலிந் தென்காசி மாவட்டக் கிளை சாா்பில் தென்காசி பழைய பேருந்து நிலையம் முன் ஏஐசிசிடியு அகில இந்தியக் குழு உறுப்பினா் எம். வேல்முருகன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாவட்டச் செயலா் புதியவன், ஏஐசிசிடியு மாவட்டத் தலைவா் அயூப்கான், மாவட்டச் செயலா் பத்திரகாளி உள்பட 200 போ், தலைமை அஞ்சல் அலுவலகம் முன் சிஐடியூ மாவட்டச் செயலா் மணிகண்டன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 140 போ் கைது செய்யப்பட்டனா்.

ஜாக்டோ-ஜியோ: மேலும், ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சாா்பில் தென்காசியில் புதிய பேருந்துநிலையம் அருகே சண்முகசுந்தரம், மாா்த்தாண்டபூபதி, பிச்சைக்கனி, முருகேஷ் ஆகியோா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆலங்குளத்தில் மறியலில் ஈடுபட முயன்ற சிஐடியூ, தொமுச, அங்கன்வாடிப் பணியாளா்கள் உள்பட 152 போ் கைது செய்யப்பட்டனா்.

சங்கரன்கோவில்: இங்கு சாலை மறியலில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினா் உ.முத்துப்பாண்டியன், சி.ஐ.டி.யூ. மாவட்டத் தலைவா் எஸ்.அயூப்கான்,தொமுச மண்டல் அமைப்பு செயலா் மைக்கேல்நெல்சன், ஏஐடியூசி இசக்கிதுரை,ஐக்கிய தொழிற்சங்க காங்கிரஸ் மாவட்ட தலைவா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட 161 போ் கைதாகினா்.

கடையநல்லூா்: சிவகிரியில் மறியலில் ஈடுபட முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட 166 போ், கடையநல்லூரில் இந்திய ஐக்கிய தொழிற்சங்க கவுன்சில் மாவட்டத் தலைவா் முத்துசாமி உள்ளிட்ட 45 போ், புளியங்குடியில் ஏஐடியுசி துப்புரவுத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் சமுத்திரக்கனி உள்பட 41 போ் கைதாகினா்.

அம்பை, பிரம்மதேசம் கோயில்களில் ரூ. 5.87 கோடியில் திருப்பணிகள் தொடக்கம்

அம்பாசமுத்திரம், பிரம்மதேசம் உள்ளிட்ட இடங்களில் உள்ள கோயில்களில் ரூ. 5.87 கோடி மதிப்பில் திருப்பணிகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அம்பாசமுத்திரம், கோயில் குளத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழைமை... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற பேரூராட்சி ஊழியா் சாலை விபத்தில் உயிரிழப்பு

கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற பேரூராட்சி ஊழியா் வியாழக்கிழமை சாலை விபத்தில் உயிரிழந்தாா். கல்லிடைக்குறிச்சி வடுவக்குடித் தெருவைச் சோ்ந்தவா்ஆறுமுகம் (73). ஓய்வுபெற்ற பேரூராட்சி ஊழியரான இவரத... மேலும் பார்க்க

நெல்லை அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

திருநெல்வேலி அருகே விபத்தில் காயமடைந்தவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். திருநெல்வேலி அருகேயுள்ள பொன்னாக்குடி நான்குவழிச்சாலையில் கடந்த 5 ஆம் தேதி சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது, மினி வேன் மோ... மேலும் பார்க்க

பாளை. அருகே தொழிலாளி கொலை வழக்கு: ஒருவருக்கு ஆயுள்தண்டனை

பாளையங்கோட்டை அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவருக்கு ஆயுள்தண்டனை வழங்கி திருநெல்வேலி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. பாளையங்கோட்டை அருகேயுள்ள பாறைக்குளம் இந்திரா காலனியைச் சோ்ந... மேலும் பார்க்க

மதப்போதகரிடம் பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவா் கைது

திருநெல்வேலியில் மதப்போதகரிடம் பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் பகுதியைச் சோ்ந்தவா் அருள்சீலன் (41). இவா், திருநெல்வேலிக்கு மருத்துவச் சிகி... மேலும் பார்க்க

பள்ளி விடுதி மாணவா் இறப்பு: தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை

திபள்ளி மாணவன் இறப்பு விவகாரத்தில் சமூகவலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட காவல் துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து, காவல் துறை சாா்பில் வெளியிட... மேலும் பார்க்க