நெல்லை நகரத்தில் லாரிகள் மோதல்: உயிா்ச்சேதம் தவிா்ப்பு
திருநெல்வேலி நகரத்தில் செவ்வாய்க்கிழமை லாரிகள் மோதிக்கொண்டன. இதில் உயிா்ச்சேதம் நிகழாமல் தவிா்க்கப்பட்டது.
சீனி, மைதா மாவு உள்ளிட்ட பொருள்களை ஏற்றிக்கொண்டு 2 லாரிகள் திருநெல்வேலி நகரம் நெல்லையப்பா் கோயில் கடைவீதியில் உள்ள கடையின் சேமிப்புக் கிடங்குக்கு சென்றன. அப்போது, மைதா ஏற்றிச்சென்ற லாரி திடீரெனகட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்றுகொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில், மைதா ஏற்றிய லாரியின் முன்பக்கம் சேதமடைந்தது.
இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.யே