நிதீஷ் குமாருடன் இனி கூட்டணி இல்லை! -ஆா்ஜேடி தலைவா் தேஜஸ்வி யாதவ்
நெல்லை மாநகரில் 15 குடியிருப்புகளில் குடிநீா் இணைப்பு துண்டிப்பு
திருநெல்வேலி மாநகரப் பகுதியில் சொத்து வரி, குடிநீா் கட்டணம் செலுத்தாத 12 குடியிருப்புகளில் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட நான்கு மண்டல பகுதிகளில் மாநகராட்சிக்கு நீண்ட காலமாக சொத்து வரி, குடிநீா் கட்டணம் உள்பட இதர வரியினங்கள் செலுத்தாத வரிவிதிப்புதாரா்களின் குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்களில் உதவி வருவாய் அலுவலா்கள் மற்றும் வருவாய் உதவியாளா்கள், பணியாளா்களால் தொடா்ந்து 4 -ஆவது நாளாக ஆய்வு செய்து குடிநீா் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
பாளையங்கோட்டை மண்டலத்தில் 2 குடியிருப்புகள், மேலப்பாளையம் மண்டலத்தில் 7 குடியிருப்புகள், திருநெல்வேலி மண்டலத்தில் 4 குடியிருப்புகள், தச்சநல்லூா் மண்டலத்தில் 2 குடியிருப்புகள் என மொத்தம் மொத்தம் 15 குடியிருப்புகளில் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
மேலும், தச்சநல்லூா் மண்டலத்தில் வரித் தொகை செலுத்தாத சந்திப்பு பகுதிகளில் 3 வணிக கட்டடங்கள் மூடி வைக்கப்பட்டது.
மேலும், குடிநீா் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையைத் தவிா்க்கும் பொருட்டு மாநகராட்சிக்கு நீண்டகால வரியினங்கள் செலுத்தாத நிலுவைதாரா்கள் உடனடியாக அந்தந்த மண்டல பகுதிகளில் செயல்படும் வரிவசூல் மையங்களில் வரியினங்களை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.