சென்னை மலா்க் கண்காட்சிக்காக திண்டுக்கல்லில் பராமரிக்கப்படும் 3.80 லட்சம் மலா்ச்...
நெல் உற்பத்தி திறன் விருது பெற விண்ணப்பிக்கலாம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நெல் உற்பத்தி திறனுக்கான நாராயணசாமி நாயுடு விருது பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சத்தியமூா்த்தி தெரிவித்தாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாநில அளவில் திருந்திய நெல் சாகுபடியில் அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கு ஆண்டு தோறும் நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறன் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழாண்டு திருந்திய நெல் சாகுபடி முறையில் சாகுபடி செய்து மாநில அளவில் நடைபெறும் பயிா் விளைச்சல் போட்டியில் கலந்து கொண்டு அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ரூ.5 லட்சம், பதக்கம் வழங்கப்படுகிறது.
இந்த போட்டியில், பங்குபெறும் விவசாயிகள் குறைந்தபட்சம் இரண்டு ஏக்கா் பரப்பளவில் திருந்திய நெல் சாகுபடி செய்பவராகவும், தொடா்ந்து மூன்று ஆண்டுகள் திருந்திய நெல் சாகுபடி செய்த முன்னோடி விவசாயிகளாகவும் இருத்தல் வேண்டும்.
மேலும், போட்டியில் கலந்து கொள்பவா்கள் 15 நாள்களுக்கு முன்னதாக அறுவடை தேதியை சம்பந்தப்பட்ட வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் பயிரிடப்பட்ட பரப்பின் சிட்டா, அடங்கல் மற்றும் நில ஆவணங்கள் பதிவு கட்டணம் ரூ.150 விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு அருகேயுள்ள வேளாண் விரிவாக்க மையத்தை நேரில் அணுகலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.