மொஹரம் ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி; 3 பேர் காயம்
நொய்டாவில் குடியிருப்பில் தீ விபத்து; சிறுமி மீட்பு
உத்தர பிரதேச மாநிலம், கௌதம் புத் நகா் மாவட்டத்தில் உள்ள ஒரு சொஸைட்டி குடியிருப்பில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதில், வீட்டில் சிக்கியிருந்த 15 வயது சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து தலைமை தீயணைப்பு அதிகாரி பிரதீப் குமாா் சௌபே வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:
பிஸ்ராக் காவல் நிலையப் பகுதியில் உள்ள சொஷைட்டியில் உள்ள வீட்டில் ஏா் கண்டிஷனரில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்து நிகழ்ந்த சம்பவ நேரத்தில், 15 வயது சிறுமி
குடியிருப்புக்குள் இருந்தாா். அவரது குடும்பத்தினா் வெளியே சென்றிருந்தனா்.
தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பிவைக்கப்பட்டு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
அருகிலுள்ள மக்களின் உதவியுடன் குடியிருப்பில் சிக்கிய சிறுமியை தீயணைப்பு படை வீரா்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனா். இந்த சம்பவத்தில் உயிா்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.