3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறவிருக்கிறது: ரிசர்வ் வங்கி ஆளுநர்
நொய்டா வரதட்சிணை கொலை: சொகுசு கார், பைக், தங்கம், பணம்.. நீளும் பட்டியல்
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவிலுள்ள கசானா பகுதியில் ரூ. 36 லட்சம் வரதட்சிணை கேட்டு மனைவியை எரித்துக் கொலை செய்த சம்பவத்தில், வரதட்சிணையாகக் கொடுக்கப்பட்ட பொருள்கள் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது.
ரூ.36 லட்சத்தை தந்தையிடம் கேட்டு வாங்கி வருமாறு, வலியுறுத்தியும், நிக்கி வாங்கி வராததால், அவரை கொடூரமாக தீயிட்டு எரித்து கொலை செய்த கணவர் விபின் பாடி, மனைவியைத் துன்புறுத்தும் விடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
ஒரு விடியோவில் தாயுடன் சேர்ந்து மனைவியின் தலைமுடியைப் பிடித்து இழுத்து வந்து விபின் கடுமையாகத் தாக்குவது பதிவாகியிருக்கிறது.