'நோபல் பரிசுக்கு ட்ரம்ப் பெயரை பரிந்துரைக்கிறேன்...' - காரணம் சொல்லும் நெதன்யாகு!
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றிருக்கிறார்.
நேற்று, அவர் வெள்ளை மாளிகையில் பேசும்போது, அமெரிக்க அதிபர் ட்ரம்பை அமைதிக்கான நோபல் பரிசிற்கு பரிந்துரைத்துள்ளதாக கூறியுள்ளார்.
இது சம்பந்தமாக அவர் பேசியதாவது...
"நாம் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் அவர் ஒரு நாட்டில், ஒரு பகுதிக்கு அடுத்த பகுதி என அமைதியை உருவாக்கி வருகிறார்.
அதனால், நோபல் பரிசு கமிட்டிக்கு, நான் எழுதிய கடிதத்தை உங்களுக்கு தர விரும்புகிறேன்.
இது உங்களை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைத்த கடிதம் ஆகும்".
தீயைப் பற்ற வைத்த பாகிஸ்தான்
'ட்ரம்பிக்கு நோபல் பரிசு' என்ற தீயை முதன்முதலில் பற்ற வைத்தவர் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர். அவர் கடந்த ஜூன் மாதம், அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த போது, இதை குறிப்பிட்டார்.
இதற்கு பரிசாக, அவருக்கு வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் விருந்து கொடுத்தார்.
ட்ரம்பை அமைதிக்கான நோபல் பரிசிற்கு பரிந்துரைப்பதாக பாகிஸ்தான பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் கூறியிருந்தார்.
இப்போது இஸ்ரேல் பிரதமரும் பரிந்துரைந்திருக்கிறார்.
ட்ரம்பிற்கு நோபல் பரிசு ஆசை உள்ளது தான்.
ஆனால், அவருக்கு அந்தப் பரிசு கிடைக்குமா... கிடைக்காதா என்பது நோபல் பரிசு கமிட்டியின் கையில் தான் உள்ளது.