செய்திகள் :

``நோ லிமிட், நோ கமிட்மெண்ட்'' - சீன இளைஞர்கள் விரும்பும் `நட்பு திருமணம்'.. காரணம் என்ன?

post image

வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கிறோம் என்றால் அதில் காதல், காமம், பொறுப்புகள் என பல விஷயங்கள் இருக்கும். ஜென் z தலைமுறையினரிடம் திருமணம் இல்லாத உறவுகள் பிரபலம் அடைந்து வரும் நிலையில், சீனாவில் காதல் இல்லாத "நட்பு" திருமணம் பிரபலம் அடைந்து வருகிறது.

சீன இளைஞர்கள் காதல் துணை அல்லாமல் தங்களின் சிறந்த நண்பர்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றனர். வழக்கமான குடும்ப அழுத்தங்கள் கலாச்சார பின்னணிகளை தவிர்க்க பல சீன இளைஞர்கள் இதனை தேர்வு செய்வதாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் தெரிவித்துள்ளது.

நட்பு திருமணம் எப்படி இருக்கும்?

பாரம்பரிய திருமணங்களை போன்று இல்லாமல் நட்பு திருமணத்தை செய்து கொள்ளும் தம்பதிகள் காதல், பாலியல் ஈர்ப்பை விட நம்பிக்கைகள் மற்றும் நட்பை முக்கியமாக கருதுகின்றனர். சட்டபூர்வமாக வாழ்க்கை துணைவர்களாக அங்கீகரிக்கப்பட்டு ஒன்றாக வாழ்கின்றனர். ஆனால் தனித்தனி படுக்கையை கொண்டுள்ளனர்.

அவர்கள் விரும்பினால் மற்றவர்களுடன் டேட்டிங் செய்யலாம், குழந்தை பெற முடிவு செய்தால் தத்தெடுத்துக் கொள்ளலாம் அல்லது செயற்கை கருவூட்டல் ஆகியவற்றை தேர்வு செய்யலாம் என்று திருமணத்தின் போது ஒப்பந்தம் செய்து கொள்கின்றனர்.

இந்த நடைமுறை முதன்முதலாக ஜப்பானில் அறிமுகமானது. இங்கு பல நிறுவனங்கள் நட்பு திருமணங்களுக்கான சேவைகளை வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தியின்படி, சீனாவின் சோங்கிங்கைச் சேர்ந்த 20 வயதான மெய்லன் என்ற பெண், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தனது தோழியை திருமணம் செய்தார். திருமணத்தைப் பதிவு செய்த பிறகு வழக்கமான நடைமுறைகள் எல்லாம் வேண்டாம் என்று முடிவு செய்தனர். அவர்கள் இருவரும் குழந்தைகளைப் பெற வேண்டாம் என்றும் ஒப்புக்கொண்டனர்.

இருவரும் தனித்தனி அறைகளில் தூங்குகிறார்கள், பாலியல் தொடர்பு இல்லை. ஒவ்வொருவரும் வீட்டில் தங்களுக்கென இருக்கும் இடத்தைப் பராமரிக்கிறார்கள்.

இது குறித்து எல்லாம் திருமணத்திற்கு முந்தைய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். வீட்டுச் செலவுகள், தனி சொத்து உரிமை, உறவினர்களைப் பார்ப்பது ஆகியவை இதில் அடங்கும். இது மட்டுமல்லாமல், இந்த ஒப்பந்தத்தில் விவாகரத்து குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது அவர்களில் யாராவது பாரம்பரியமாக திருமணம் செய்து கொள்ள விரும்பினால், நட்பு திருமண துணையை விவாகரத்து செய்யலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு கமிட்மெண்ட் இல்லாத திருமண வாழ்க்கையே சீன இளைஞர்கள் விரும்புகின்றனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

ரீல்ஸ் எடுத்த பெண்ணிடம் தவறாக நடந்த இளைஞர்; பதிலுக்கு பெண் செய்த வேலை.. - வைரல் வீடியோ!

வட இந்தியாவைச் சேர்ந்த இன்ஃப்ளுயன்சர் ஒருவர், வீட்டின் மாடிப் பகுதியில் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருக்கும்போது இடையில் வந்த இளைஞர் அந்தப் பெண்ணை தகாத முறையில் தொடும்படியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகி... மேலும் பார்க்க

கல்யாணத்தில் ஒலித்த பாடல்; திருமணத்தை நிறுத்திய மணமகன் - பின்னணி இதுதான்

இந்தியாவில் திருமண சீசன் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் பல இதயங்கள் இணையும் விழாக்கள் நடந்துகொண்டிருக்க, பல வித்தியாசமான சம்பவங்களும் அரங்கேறுகின்றன. டெல்லியில் நடந்த திருமண நிகழ்வில் எதிர்பாராத திருப... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: குறுகிய கால விசாவில் இருக்கும் 1000 பாகிஸ்தானியர்கள் வெளியேற பட்னாவிஸ் உத்தரவு

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளனர். இத்தாக்குதலில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்பு ஈடுபட்டு இருப்பத... மேலும் பார்க்க

``உயிரோடு இருக்கும் போதே எனக்கும், மனைவிக்கும் கட்டிய கல்லறை.." -ஓய்வு பெற்ற அரசு பொறியாளர் உருக்கம்

கர்நாடகாவில் ஓய்வு பெற்ற அரசு பொறியாளர் ஒருவர் தான் உயிரோடு இருக்கும்போதே தனக்கும், தனது மனைவிக்கும் கல்லறை கட்டியுள்ளார்.கர்நாடகா மாநிலத்தில் மைசூரு அருகில் இருக்கும் வலகெரே என்ற கிராமத்தைச் சேர்ந்தவ... மேலும் பார்க்க

Pahalgam Attack: "எங்கள் வீடியோவை தவறாகப் பயன்படுத்துகிறார்கள்" - Viral Video தம்பதி சொல்வது என்ன?

ஜம்மு காஷ்மீரில் நடந்த தாக்குதல் இந்தியாவையே கவலைக்குள்ளாக்கியிருக்கிறது. அங்கு நடந்ததாகக் கூறப்படும் ஒவ்வொரு சம்பவமும் பல்வேறு வகையில் மக்களிடம் பகிரப்படுகிறது.குறிப்பாக சுவிட்சர்லாந்து விசா மறுக்கப்... மேலும் பார்க்க

`டூரை முடித்துவிட்டு தான் வருவோம்’ - காஷ்மீரில் சுற்றுலாவை தொடரும் பயணிகள் - என்ன சொல்கிறார்கள்?

காஷ்மீரில் நேற்று முன் தினம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இத்தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுற்றுலா பயணிகள் அவசர அவசரமாக தங... மேலும் பார்க்க