செய்திகள் :

பசியின் கோரம்! காஸாவில் குழந்தைகள் அழுவதற்குக்கூட முடிவதில்லை!

post image

காஸாவில் உணவின்றி பசியால் வாடும் குழந்தைகள் பேசுவதற்கு, அழுவதற்குக்கூட வலிமையில்லை என 'சேவ் தி சில்ட்ரன்' என்ற சர்வதேச தொண்டு நிறுவனத்தின் தலைவர் ஐ.நா.வில் பேசியுள்ளார்.

கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர் நடந்துகொண்டிருக்கிறது.

இந்த போரின் இடையே காஸா மக்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட பொருள்களை ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகள் வழங்கி வந்த நிலையில் இஸ்ரேல் அதற்கு தடை விதித்ததால் அங்கு கடும் பஞ்சம் நிலவுகிறது.

உணவு கிடைக்காமல் குழந்தைகள் உள்பட பலரும் செத்துக்கொண்டிருக்கின்றனர். உணவு மையங்களை நோக்கிச் செல்லும் மக்களையும் இஸ்ரேல் ராணுவம் இரக்கமின்றி சுட்டு வீழ்த்துகிறது. மேலும் காஸாவின் பல்வேறு பகுதிகளிலும் தாக்குதல் நடத்தி வருகிறது.

காஸாவில் உணவு, மருத்துவம் இன்றி மக்கள் தவித்து வருவதாக கவலை தெரிவித்துள்ள ஐ.நா. அங்கு பஞ்ச நிலையையும் அறிவித்துள்ளது.

இந்த பஞ்சம் இயற்கைப் பேரிடரால் உருவானதல்ல, முழுக்க முழுக்க மனிதா்களால் உருவாக்கப்பட்டது என்றும் இதனை உடனடியாக நிறுத்த முடியும் என்றும் ஐ.நா. கூறியுள்ளது.

இந்நிலையில் 'சேவ் தி சில்ட்ரன்' என்ற சர்வதேச தொண்டு நிறுவன அமைப்பின் தலைவர் ஆஷிங், காஸாவில் குழந்தைகளின் நிலை குறித்து ஐ.நா. கூட்டத்தில் பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது:

காஸா பகுதியில் பசியால் வாடும் குழந்தைகள் மிகவும் பலவீனமாக உள்ளனர். அவர்களுக்கு அழுவதற்குக்கூட வலிமை இல்லை. பசியில் இருந்தும் பெரும்பாலான குழந்தைகள் அழுவதில்லை. பேசுவதும் இல்லை.

கடந்த வாரம் காஸாவில் பஞ்ச நிலை என்று ஐ.நா. அறிவித்தது வெறும் வறட்சியான தொழில்நுட்ப சொல் அல்ல.

போதுமான உணவு இல்லாதபோது குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாக மாறுகிறார்கள். உணவு இல்லாதபோது உடல், உயிர்வாழ்வதற்கு உடலில் உள்ள கொழுப்பையே உட்கொள்கிறது. கொழுப்பு கரையும்பட்சத்தில் அடுத்து தசைகள் மற்றும் முக்கிய உறுப்புகளை சாப்பிட ஆரம்பிக்கிறது. படிப்படியாக அவர்கள் உடல் வலிமை இழந்து வலியுடன் இறக்கிறார்கள். ஆனால் அதனை 'பஞ்சம்' என்று சாதாரணமாகச் சொல்கிறோம்.

அங்கு மருத்துவமனைகளும் அமைதியாக இருக்கின்றன. குழந்தைகளுக்குப் பேசவோ அல்லது வேதனையில் அழவோகூட வலிமை இல்லை. அவர்கள் மெலிந்து படுத்தே இருந்து உயிரிழக்கின்றனர்.

இந்த அறையில் உள்ள அனைவருக்கும் இந்தக் கொடுமையைத் தடுக்க வேண்டிய சட்டப்பூர்வ மற்றும் தார்மீகப் பொறுப்பு உள்ளது என்று கூறினார்.

சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் கீழ் பட்டினியை போர் ஆயுதமாகப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. காசாவில் பஞ்சம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

The head of Save the Children described in horrific detail Wednesday the slow agony of starving children in the Gaza Strip

இதையும் படிக்க | காஸாவில் பட்டினிச் சாவு 300-யை எட்டியது! 117 பேர் குழந்தைகள்!!

‘ஹெச்1பி’ விசா நடைமுறையில் மீண்டும் மாற்றம்: டிரம்ப் நிர்வாகம் அதிரடி

வாஷிங்டன்: ‘ஹெச்1பி’ நுழைவுஇசைவு (விசா) திட்டத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை மேற்கொள்ள அமெரிக்கா அதிபா் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. ஹெச்1பி நுழைவு இசைவு மூலமா... மேலும் பார்க்க

தருமபுரி திமுக முன்னாள் எம்எல்ஏ ஆா்.சின்னச்சாமி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

தருமபுரி தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ ஆர். சின்னசாமி மறைவையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 1971, 1984 மற்றும் 1989-ஆம் ஆண்டு தேர்தல... மேலும் பார்க்க

தருமபுரி திமுக முன்னாள் எம்எல்ஏ ஆா்.சின்னச்சாமி காலமானாா்!

தருமபுரி தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர். சின்னசாமி வயது மூப்பு காரணமாக வியாழக்கிழமை காலமானார். தருமபுரி மாவட்ட திமுக முன்னோடியான ஆர். சின்னசாமி 1971, 1984 மற்றும் 1989-ஆம் ஆண்டு தேர்தல்க... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்துக்கு செப். 8-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிப்பு

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு செப்டம்பா் 8-ஆம் தேதி நாகை மாவட்டத்துக்கு உள்ளுா் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா... மேலும் பார்க்க

அமெரிக்க இறக்குமதி பொருள்களுக்கு இந்தியா அதிக வரி விதிக்க வேண்டும்: கேஜரிவால்

புது தில்லி: அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு இந்தியா அதிக வரிகளை விதிக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை வலியுறுத்த... மேலும் பார்க்க

சூரத்-துபை இண்டிகோ விமானம் அகமதாபாத்தில் அவசரமாக தரையிறக்கம்

அகமதாபாத்: சூரத்தில் இருந்து துபை சென்று கொண்டிருந்த விமானம் இயந்திரக்கோளாறு காரணமாக, அகமதாபாத் விமானநிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.சூரத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 150-க்கும் மேற்பட்டோ... மேலும் பார்க்க