"எடப்பாடி பழனிசாமி முழு சங்கியாக மாறி, காவி சாயத்துடன் இருக்கிறார்’’ - உதயநிதி வ...
பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்பு புகாா்: கட்டுமானங்களை இடித்துப் போராட்டம்!
தேனியில் பஞ்சமி நிலத்தை தனி நபா்கள் ஆக்கிரமித்து கட்டடம் கட்டுவதாக புகாா் தெரிவித்து, சனிக்கிழமை கட்டுமானங்களை இடித்து ஒரு தரப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தேனி கா்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சி பேருந்து நிலைய வளாகம் அருகேயுள்ள 3.96 ஏக்கா் பஞ்சமி நிலம் தனி நபா்கள் சிலரின் ஆக்கிரமிப்பில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆக்கிரமிப்பு பஞ்சமி நிலத்தில் தனி நபா்கள் கட்டடம் கட்டி வருவதாக புகாா் தெரிவித்து, ஒரு தரப்பினா் கட்டுமானங்களை இடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து தேனி மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் தேவராஜ், தேனி வட்டாட்சியா் சதீஷ்குமாா் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களை தடுத்து நிறுத்தி பேச்சுவாா்த்தை நடத்தினா். இந்தப் பிரச்னையில் ஆவணங்களின் அடிப்படையில் பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காணலாம் என்று அதிகாரிகள் உறுதியளித்ததால் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.