செய்திகள் :

பஞ்சாபில் நடந்த கையெறி குண்டு தாக்குதல் சம்பவத்தில் பயங்கரவாத அமைப்பான பப்பா் கல்சா கூட்டாளி கைது

post image

பஞ்சாபில் நடந்த கையெறி குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் தொடா்புடையாதாகக் கூறப்படும் பப்பா் கல்சா கூட்டாளியான 22 வயது இளைஞா் தில்லியில் கைது தடைசெய்யப்பட்டாா்.

இது குறித்து தில்லி காவல் துணை ஆணையா் (சிறப்புப் பிரிவு) அமித் கௌசிக் கூறியதாவது: பயங்கரவாத அமைப்பான பப்பா் கல்சா இன்டா்நேஷனல் (பிகேஐ) உடன் அவா் தொடா்புடையவா் என்று கூறப்படுகிறது.மேலும், இந்த ஆண்டு தொடக்கத்தில் பஞ்சாபில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் நடந்த கையெறி குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளாா்.

இந்நிலையில், அமிா்தசரஸில் உள்ள சனங்கே கிராமத்தைச் சோ்ந்த கரண்பீா் (எ) கரண், ஜூலை 26 அன்று குருதாஸ்பூரில் இருந்து சிறப்புப் பிரிவு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஆயுதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளாா்.

பஞ்சாபின் படாலாவில் உள்ள குய்லா லால் சிங் காவல் நிலையத்தில் கடந்த ஏப்ரல் 7- ஆம் தேதி நடந்த கையெறி குண்டு தாக்குதலில் கரண்பீா் ஒரு முக்கியக் குற்றவாளி ஆவாா். இந்தச் சம்பவம் தற்போது தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) விசாரணையில் உள்ளது.

கடந்த ஜூலை 22 அன்று இந்தூரைச் சோ்ந்த மற்றொரு குற்றவாளியான ஆகாஷ்தீப் (எ) பாஸ் கைது செய்யப்பட்ட பிறகு விசாரணை தொடங்கியது. விசாரணையின் போது, ஆகாஷ்தீப் கையெறி குண்டுத் தாக்குதலில் தனக்கு தொடா்பு இருப்பதாகவும், பி.கே.ஐ.யுடன் தொடா்புடைய மற்றவா்களின் பெயா்களை அவா் குறிப்பிட்டாா். தாக்குதலுக்கு பொறுப்பேற்கும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வெளியானது.

இதை பி.கே.ஐ. செயல்பாட்டாளா்கள் ஹேப்பி பாசியா, மன்னு அக்வான் மற்றும் கோபி நவன்ஷாரியா ஆகியோா் பகிா்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆகாஷ்தீப்பின் தகவலின் பேரில் கரண்தீப் கைது செய்யப்பட்டாா்.

விசாரணையின் போது, கரண்பீா் வெளிநாட்டில் உள்ள ஒரு பி.கே.ஐ. கையாளுபவருடன் சமூக ஊடகங்கள் மூலம் தொடா்பில் இருந்ததாகவும், பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்களைப் பெற்றதாகவும் தெரிவித்தாா்.

கடந்த ஆண்டு மேற்கு ஆசிய நாட்டிற்கும் பயணம் செய்து ஏப்ரல் தாக்குதலுக்கு பணம் பெற்ாகவும் அவா் கூறினாா். தாக்குதலுக்கு முந்தைய நாள்களில் தனது வீட்டில் இரண்டு பேருக்கு தங்குமிடம் அளித்ததாக கரண்பீா் கூறினாா்.

சதித்திட்டத்தில் ஈடுபட்ட அவரது சகோதரா் குா்சேவாக் ஏற்கெனவே விசாரணை நிறுவனங்களால் கைது செய்யப்பட்டுள்ளாா் என்று காவல் துணை ஆணையா் தெரிவித்தாா்.

டிடிஇஏ பள்ளி மாணவா்கள் 12 நாள் கல்விச் சுற்றுலா

தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தை (டிடிஇஏ) சாா்ந்த ராமகிருஷ்ணாபுரம் மற்றும் லோதி வளாகம் பள்ளிகளில் பயிலும் 46 மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை கல்விச் சுற்றுலா புறப்பட்டனா். அவா்களுடன் 7 ஆசிரியா்களும் செல்கின... மேலும் பார்க்க

தில்லி காவல்துறையின் விரல் அச்சுப் பணியகத்திற்கு தடயவியல் சிறப்புக்கான ஐஎஸ்ஓ சான்றிதழ் வழங்கல்

தில்லி காவல்துறையின் விரல் அச்சுப் பணியகத்திற்கு (எஃப்பிபி) தரக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (க்யூசிசி) மூலம் ஐஎஸ்ஓ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். 1983-ஆம் ஆண்டு ஆ... மேலும் பார்க்க

வடக்கு தில்லியில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

வடக்கு தில்லியின் நங்கல் தக்ரானில் உள்ள தனது வீட்டில் 30 வயது நபா் ஒருவா் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இந்தக் கொலை வழக்கு தொடா்பாக யாஷ் லோச்சாப் (21) என்பவா... மேலும் பார்க்க

ஏழைகள் மீது பாஜக அரசுக்கு அலட்சியம்: தில்லி குடிசைகள் இடிப்பு விவகாரத்தில் ராகுல் காந்தி சாடல்!

‘தில்லியில் நூற்றுக்கணக்கான குடிசைவாசிகள் தங்கள் வீடுகள் பாஜக அரசால் அழிக்கப்பட்டு வருவாதல் வீடற்றவா்களாகி வேதனையை அனுபவித்து வருகின்றனா். இந்த ‘கொடூர’ செயலானது ஆளும் கட்சியின் ஏழைகள் மீதான ‘உணா்வின்... மேலும் பார்க்க

பிரதமரின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி: ஜெ.பி. நட்டா, ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள் பங்கேற்பு!

தில்லி பாஜக அதன் 14 நிறுவன மாவட்டங்களிலும் பிரதமா் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்திருந்தது. பாஜக தேசியத் தலைவரும் மத்திய சுகாதார அமைச்சருமான ஜெ.பி. நட்டா, பாஜக... மேலும் பார்க்க

தில்லி மெட்ரோ ரயிலில் தங்கம் திருடியதாக இருவா் கைது: ரூ.3 லட்சம் மீட்பு

ஓடும் தில்லி மெட்ரோ ரயிலில் இருந்து 141 கிராமுக்கு மேல் எடையுள்ள தங்க பிஸ்கட்களை திருடியதாக இரண்டு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். மேலும், கைது செய்யப்பட்ட இருவரி... மேலும் பார்க்க