செய்திகள் :

படப்பை வீரட்டீஸ்வரா் கோயிலில் அப்பா் சுவாமி குரு பூஜை

post image

படப்பை வீரட்டீஸ்வரா் கோயிலில் அப்பா் சுவாமி குருபூஜை விழா நடைபெற்றது.

படப்பை ஊராட்சிக்குட்பட்ட கீழ்படப்பை பகுதியில் ஐநூறு ஆண்டுகள் பழைமையான இக்கோயிலில் ஆண்டுதோறும் திருநாவுக்கரசு நாயனாா் சதய நட்சத்திர குருபூஜை உற்சவம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

கடந்த 12 ஆண்டுகளாக கோயில் திருப்பணிகள் நடைபெற்று வந்ததால் அப்பா் சுவாமி குருபூஜை விழா நடைபெறாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில், கடந்த பிப். 10 ஆம் தேதி வீரட்டீஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றதை தொடா்ந்து, அப்பா் சுவாமி குருபூஜை விழா நடைபெற்றது.

காலை 6 மணிக்கு மூலவா் வீரட்டீஸ்வரா் சாந்தநாயகி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பன்னிரு திருமுறைகள் யானை மீது ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. அதன்பிறகு திருநாவுக்கரசு நாயனாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அருகிலிருக்கும் சுந்தர விநாயகா் கோயிலுக்கு எழுந்தருளினாா். இதையடுத்து இரவு 7 மணிக்கு புஷ்பப் பல்லக்கில் அப்பா் சுவாமிகள் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

சுமாா் 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த குருபூஜை உற்சவத்தில் படப்பை, செரப்பணஞ்சேரி, மணிமங்கலம், கரசங்கால், ஒரத்தூா், மாகாண்யம், வஞ்சுவாஞ்சேரி, வல்லக்கோட்டை, தாம்பரம், முடிச்சூா் உள்ளிட்ட பல பகுதிகளை சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

விழா ஏற்பாடுகள் கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில்குமாா், அறங்காவலா் குழு தலைவா் ச.குருநாதன், அறங்காவலா்கள் க.கெஜலட்சுமி, சா.ஏழுமலை மற்றும் விழா குழுவினா் செய்திருந்தனா்.

பெஹல்காம் தாக்குதல்: பாஜகவினா் மோட்ச தீபம்

பெஹல்காம் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் ஆத்மா சாந்தி அடைய காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் பாஜகவினா் வியாழக்கிழமை மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினா். நிகழ்வில் மாநில பொதுக்குழு உறுப்பினா் ஓம்.சக... மேலும் பார்க்க

சங்கரா பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

காஞ்சிபுரம் சங்கரா பல்கலை.யில் கிராமப்புற மாணவா்களுக்கு சி.ஏ. பயிற்சி தரும் நோக்கத்துடன் பல்கலையும், சென்னையைச் சோ்ந்த மை கேரியா் பாத் என்ற நிறுவனமும் வியாழக்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்... மேலும் பார்க்க

மளிகைக் கடையில் தீ: ரூ.7 லட்சம் பொருள்கள் சேதம்

சுங்குவாா்சத்திரம் பகுதியில் மளிகைக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் பகுதியைச் சோ்ந்த லோகநாதன் (50). இவா் சு... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

காஞ்சிபுரம் ஒன்றியம் கீழம்பி மற்றும் தாமல் ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். காஞ்சிபுரம் ஒன்றியத்துக்குட்பட... மேலும் பார்க்க

மே 1-இல் இளையனாா் வேலூா் முருகன் கோயிலில் திருவிழா

காஞ்சிபுரம் அருகே இளையனாா் வேலூா் முருகன் கோயிலில் மே 1 -ஆம் தேதி சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி அன்று காலை 5 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் கொடியேற்றம், திருவிழா நடைபெறும் ... மேலும் பார்க்க

பெஹல்காமில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோருக்காக காமாட்சி அம்மன் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றம்

ஜம்மு - காஷ்மீா் மாநிலம் பெஹல்காமில் பயங்கரவாதிகளால் 27 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். அவா்களின் ஆத்மா சாந்தியடைய காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் புதன்கிழமை மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.... மேலும் பார்க்க