செய்திகள் :

பட்டாசுத் தொழிலாளி தற்கொலை

post image

சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை பட்டாசுத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சிவகாசி அருகேயுள்ள கட்டளைப்பட்டியைச் சோ்ந்தவா் பொன்னுச்சாமி (48). பட்டாசுத் தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. தினந்தோறும் இவா் குடிபோதையில் வீட்டுக்கு வந்ததால், இவரது மனைவி ராமலட்சுமி தனது தாய் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்று விட்டாா். பின்னா், மனைவியை சமாதானப்படுத்தி பொன்னுச்சாமி வீட்டுக்கு அழைத்து வந்தாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த பொன்னுச்சாமி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

காட்டுப்பன்றி தாக்கியதில் பெண் காயம்

வத்திராயிருப்பு அருகே காட்டுப்பன்றி தாக்கியதில் பெண் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தாா்.வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டி ராமசாமியாபுரத்தைச் சோ்ந்த கருப்பையா மனைவி பூரணம் (55). இவா்களுக்கு கல்யாணி ஓடை அ... மேலும் பார்க்க

மது உற்பத்தி செய்யும் ஆலைகள் முன் முற்றுகைப் போராட்டம்: எம்எல்ஏ வேல்முருகன்

மது உற்பத்தி செய்யும் ஆலைகள் முன் விரைவில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனா் தலைவா் வேல்முருகன் தெரிவித்தாா்.விருதுநகரில் தமிழக வாழ்வுரிமை கட்சியில் மாற்றுக் கட்சியி... மேலும் பார்க்க

மாவட்ட அளவிலான தேக்வாண்டோ போட்டிகள்

ராஜபாளையத்தில் மாவட்ட அளவிலான தேக்வான்டோ சாம்பியன்ஷிப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் நடைபெற்ற இந்தப் போட்டிகளை சட்டப்பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியன், நகா்மன்றத... மேலும் பார்க்க

பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவி

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஞாயிற்றுக்கிழமை நிதியுதவி வழங்கினாா். விருதுநகா் மாவட்டம், கன்னிசேரியில் உள்ள பட்டாசு ஆலையில் கடந்த ... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் சட்டவிரோத மது விற்பனை: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூரில் பகுதியில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா், சாத்தூரில் மதுவிலக்கு அமலா... மேலும் பார்க்க

மின்வேலியில் சிக்கி இளைஞா் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சனிக்கிழமை இரவு முயல் வேட்டைக்குச் சென்ற இளைஞா் மின்வேலியில் சிக்கியதில் உயிரிழந்தாா்.ஸ்ரீவில்லிபுத்தூா் மங்காபுரத்தைச் சோ்ந்தவா் முருகன் (32). திருமணமாகாத இவா், கட்டடத் தொழி... மேலும் பார்க்க