நேபாளத்தின் முதல் பெண் பிரதமராக சுசீலா கார்கி பதவியேற்பு; முன்னெடுத்த Gen Z போரா...
பட்டிதார் - ரத்தோட் பங்களிப்பில் மத்திய மண்டலம் பலமான முன்னிலை
துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில், வெள்ளிக்கிழமை முடிவில் மத்திய மண்டலம் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 384 ரன்கள் எடுத்துள்ளது.
கேப்டன் ரஜத் பட்டிதார், யஷ் ரத்தோட் ஆகியோர் சதம் கடக்க, அந்த அணி 235 ரன்கள் முன்னிலை பெற்று விளையாடி வருகிறது.
பெங்களூரில் வியாழக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தெற்கு மண்டலம், 149 ரன்களுக்கே ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக தன்மய் அகர்வால் 31 ரன்கள் அடித்தார். மத்திய மண்டல பெüலர்களில் சரன்ஷ் ஜெயின் 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.
இதையடுத்து தனது இன்னிங்ûஸ தொடங்கிய மத்திய மண்டலம், வியாழக்கிழமை முடிவில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் எடுத்திருந்தது. 2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை, அக்ஷய் வத்கர் 3 பவுண்டரிகளுடன் 22 ரன்களுக்கு முதல் விக்கெட்டாக வெளியேற, தொடர்ந்து வந்த சுபம் சர்மா 6 ரன்களுக்கு ஸ்டம்ப்பை பறிகொடுத்தார்.
4-ஆவது பேட்டராக கேப்டன் ரஜத் பட்டிதார் வர, அரைசதம் கடந்த தொடக்க வீரர் டேனிஷ் மேல்வர் 5 பவுண்டரிகளுடன் 53 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டார். அடுத்து வந்த யஷ் ரத்தோட், பட்டிதாருடன் இணைய, அணியின் ஸ்கோர் விறுவிறுவென உயர்ந்தது.
பட்டிதார் - ரத்தோட் பார்ட்னர்ஷிப் 4-ஆவது விக்கெட்டுக்கு 167 ரன்கள் சேர்த்த நிலையில், சதம் கடந்த பட்டிதார் 12 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 101 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து வந்த உபேந்திர யாதவ் 5 ரன்களுக்கு சாய்க்கப்பட்டார்.
மறுபுறம் யஷ் ரத்தோட் சதம் கடந்து நிதானமாக விளையாட, அவருடன் சரன்ஷ் ஜெயின் இணைந்தார். நாளின் முடிவில், ரத்தோட் 137, ஜெயின் 47 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
தெற்கு மண்டல பெüலர்களில் குர்ஜப்னீத் சிங் 3, நிதீஷ், வாசுகி கெüஷிக் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.