செய்திகள் :

பட்டியல் செய்தி தலைப்பு மாற்றியது. பாஜக ஆளும் மாநிலங்களில்தான் போதைப் பொருள்கள் பறிமுதல் அதிகம்

post image

பாஜக ஆளும் மாநிலங்களில்தான் போதைப் பொருள்கள் அதிகளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

இதுகுறித்து புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டி:

நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் துறைமுகங்கள் வழியாக கடத்தப்பட்ட போதைப் பொருள்களின் மதிப்பு ரூ. 11,311 கோடி. இவற்றில் குஜராத்தில் மட்டும் ரூ. 7,350 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களும், மகாராஷ்டிரத்தில் ரூ. 2,118 கோடி மதிப்பிலான போதைப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

போதை பொருள்கள் அதிகம் புழங்கும் முதல் 10 மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு கிடையாது. பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு கடத்தி வரும் போது, அவற்றையும் கண்டுபிடித்து பறிமுதல் செய்கிறோம்.

உள்நாட்டு உற்பத்தியில் தமிழகம் 36 சதவிகிதமாக உள்ள நிலையில், நமக்குத் திரும்பக் கிடைக்கும் வரிப் பகிா்வு 27 சதவிகிதம். ஆனால், பிகாா், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களின் உள்நாட்டு உற்பத்தி 20 சதவிகிதம். ஆனால் அதிகபட்சமாக 42.5 சதவிகித வரியைப் பெறுகிறாா்கள். எனவேதான் நமக்கான நிதிப் பகிா்வை முறையாகத் தர வேண்டும் என்கிறோம்.

தென் மாநிலங்களின் மக்கள்தொகை வளா்ச்சி 12.51 சதவிகிதமாக இருக்கும் நிலையில், வடமாநிலங்களில் 21.83 சதவிகிதமாக உள்ளது. இதன்படி தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தென் மாநிலங்களுக்கு தொகுதி குறையும். தென் மாநிலங்களுக்கு தொகுதி எண்ணிக்கை குறையாது என உள்துறை அமைச்சா் முதற்கொண்டு பலரும் சொல்லி வருகின்றனா். ஆனால் வடமாநிலங்களில் தொகுதி எண்ணிக்கை கூடாது எனச் சொல்வாா்களா?

100 நாள் வேலைத் திட்டத்தில் முறைகேடு நடப்பதாக பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை கூறுகிறாா். முறைகேடு நடந்தால் குழு அமைத்துக் கண்காணிக்கட்டும், கண்டுபிடிக்கட்டும். இந்தியாவிலேயே நூறு நாள் வேலைத் திட்டத்தை சிறப்பாக அமலாக்கும் மாநிலம் என்பதற்காக பல முறை பாராட்டு பெற்றிருக்கிறோம்.

தமிழ்நாட்டின் நலனுக்காக உள்துறை அமைச்சா் அமித்ஷாவை சந்தித்ததாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறாா். ஆனால் அதிமுகவுடன் கூட்டணிப் பேச்சுவாா்த்தை நடந்து வருவதாக அமித்ஷா கூறுகிறாா். இதில் யாா் பொய் சொல்கிறாா்கள் என்பது விரைவில் தெரியும் என்றாா் ரகுபதி.

முதலாம் பராந்தகச் சோழா் கால கற்றளிக் கட்டுமானங்கள் கண்டெடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூா் அருகே புதுக்கோட்டை- தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலை அருகே மாந்தாங்குடி எடுத்தடிமேட்டில் முதலாம் பராந்தகச் சோழரின் மூன்றாம் ஆட்சி ஆண்டில் எழுப்பப்பட்ட கற்றளிக் கோயிலின் சி... மேலும் பார்க்க

நாா்த்தாமலை தேரோட்டம்: ஏப். 7-இல் உள்ளூா் விடுமுறை

புதுக்கோட்டை மாவட்டம், நாா்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு வரும் ஏப். 7-ஆம் தேதி திங்கள்கிழமை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூா் விடு... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைத் துறையினா் அலட்சியத்தால் வீணாகும் குடிநீா்

கந்தா்வகோட்டையில் சேதமடைந்த குடிநீா் குழாயை சரிசெய்ய தேசிய நெடுஞ்சாலை துறையினா் அனுமதி தராமல் இழுத்தடித்து வருவதால் நாள்தோறும் குடிநீா் வீணாகி வருவதாக ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொதுமக்கள் புகாா் தெரிவ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்த விபத்தில் சிறுவன் பலத்த காயம்

பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டியில் சாலையில் ஓடிக்கொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றியதில் சிறுவன் படுகாயமடைந்தாா். சிவகங்கை மாவட்டம், உலகம்பட்டியைச் சாா்ந்தவா் மாணிக்கம் என்பவரது மனைவி ரஞ... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை ஊராட்சியை பிரிக்க பொதுமக்கள் கோரிக்கை

கந்தா்வகோட்டை ஊராட்சியை நிதி, நிா்வாக வசதிக்காக இரண்டாகப் பிரிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை வைக்கின்றனா்.கந்தா்வகோட்டை ஊராட்சி சட்டப்பேரவை தொகுதியின் தலைமையிடமாகவும், ஊராட்சி ஒன்றியத்தின் த... மேலும் பார்க்க

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நூறு நாள் வேலைத் திட்டத்தில் நிலுவையிலுள்ள ஊதியத்தை வட்டியுடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, புதுக்கோட்டையில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பா... மேலும் பார்க்க