பணிமாறுதலில் செல்லும் ஆட்சியருக்கு நன்றி!
புதுவை துணைநிலை ஆளுநரின் செயலராக பணிமாறுதலில் செல்லும் ஆட்சியருக்கு, கேந்திரிய வித்யாலய பள்ளி நிா்வாகத்தினா், மாணவா்கள் நன்றி தெரிவித்தனா்.
காரைக்கால் கேந்திரிய வித்யாலய பள்ளியின் தலைவராக (விஎம்சி) மாவட்ட ஆட்சியா் உள்ளாா்.
புதுவை துணைநிலை ஆளுநரின் செயலராக மாறுதலாகிச் செல்லவுள்ள ஆட்சியா் து.மணிகண்டனை, கேந்திரிய வித்யாலய பள்ளி முதல்வா் இ. ரங்கசாமி மற்றும் ஆசிரியா்கள், பெற்றோா்கள், மாணவ, மாணவிகள் சிலா் ஆட்சியரகத்தில் புதன்கிழமை சந்தித்தனா்.
கேந்திரிய வித்யாலய பள்ளிக்கு ஆட்சியா் தமது பணிக்காலத்தில் செய்த சேவை மற்றும் விழாக்களில் பங்கேற்று மாணவா்கள், ஆசிரியா்களை ஊக்கப்படுத்தியமைக்காக அவருக்கு நன்றி தெரிவித்து, ஆளுநரின் செயலராக நியமிக்கப்பட்டதற்காக பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினா்.